Ad Widget

நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சுகாதாரத் தொண்டர்கள் யாழில் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றையதினம் (திங்கட்கிழமை) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்த காலத்தில் சேவையாற்றிய 840 பேரை சுகாதாரத் தொண்டர்களாக வடக்கு மாகாண சபையினால் உள்வாங்கப்பட்டனர் என்றும்...

கொரோனா தொற்று : மேலதிக நடவடிக்கை குறித்து இன்று அமைச்சரவையில் முடிவு !!

நாட்டின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது சுகாதார அதிகாரிகள் உட்பட சகல துறையினரும் முன்வைக்கும் திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என அரசியல் வட்டார தகவல்கள்...
Ad Widget

கோவிட் வைரஸை செயற்கையாகவே உருவாக்கி அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதா??

2015 ஆம் ஆண்டு கோவிட் உயிரி ஆயுதத்தை உருவாக்கம் செய்ய சீனா திட்டமிட்டிருந்தமை தொடர்பான சீன ராணுவ ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரிலிருந்து கோவிட் வைரஸ் முதல்முறையாக பரவி உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த வைரஸ் வுகானில் உள்ள பரிசோதனை கூடத்திலிருந்து தெரியாமல் வெளியேறியிருக்கலாம் என்றும் இவை...

முள்ளிவாய்க்கால் மண்ணில் எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் – இராணுவத்தளபதி

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச...

அரச நிறுவன ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை முழுமையாகவோ 75 சதவீதமோ மூடும் நிலை ஏற்படலாம்- பசில் ராஜபக்ச

நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று நிலமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர். எதிர்காலத்தில் நாட்டில்...

இலங்கையில் கொரோனா உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 2,500ஐ கடந்தது!

நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

வடக்கில் மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 21 பேருக்குக் கொரோனா- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளாார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாவட்ட...

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு- யாழ். மாநகர முதல்வரின் முயற்சி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும்....

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம் ஆகியவை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது....

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 800ஐக் கடந்து 801ஆக அதிகரித்துள்ளது.

யாழ்.மாநகர காவல் படை சீருடை அணிந்த ஐவரும் நாலாம் மாடிக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு 5 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த மாதம் 23 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டங்களின்...

கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி வழிபாடு – யாழ். ஆயர் இல்லம் அழைப்பு

தற்போது பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும், துறவற இல்லங்களிலும், இறைமக்களின் இல்லங்களிலும் நாளை மே 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி...

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, குறித்த பாடசாலையை இராணுவத்தின் உதவியுடன் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சிகிச்சை...

யாழில் பொதுமான வைத்திய வசதிகள் இல்லை!! மக்களை எச்சரிக்கும் மாவட்ட அரசாங்க அதிபர்!!

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், “யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த ஏற்பாடு

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்திற்கு அமைய...

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு!!

தமிழக சட்ட சபை தேர்தலில் 125 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற திமுக தனிப்பெரும்பானமையுடன் இன்று(07) ஆட்சி அமைக்கிறது. சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா...
Loading posts...

All posts loaded

No more posts