- Friday
- January 23rd, 2026
40 வருடங்களின் பின்னர் பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீழ் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது உங்களுக்கான மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகும்...
வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன் சுமார் 36 வருடங்களாக தமது சொந்த மண்ணில் வாழமுடியாமல் உள்ளனர் எனவே காணிகளை விடுவிக்க வேண்டும் என வலி வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி.வடக்கு பிரதேசசபை, மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட மயிலிட்டி...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதன்போது கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தினர் தெரிவிக்கையில், பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் 2002 ம் ஆண்டு...
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் உள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கனரக...
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (20) ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் மேலும் கூறுகையில், தையிட்டி விகாரையை...
நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார். "இந்நாட்களில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம். எமது சுவாசத் தொகுதியின்...
இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை மன்னாரில் இருந்து இன்று ஆரம்பிக்க உள்ளார். வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின்...
யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை (19) அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக...
நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (18) முதல் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் விளியின் தரச் சுட்டெண் (AQI) 150 முதல் 200 வரை இருப்பதாக அஜித் குணவர்தன...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை...
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார். ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார். அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி விகாரை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தையிட்டி...
வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக இவ்வாண்டு முதற்கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதற்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று (16) காலை 9.30 மணிக்கு மீசாலை கிழக்கில் வீடமைப்புத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கான வீட்டுக்கான அடிக்கல் சம்பிரதாய பூர்வமாக...
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று (15) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு தனித்துவமான இடமாக யாழ்ப்பாண மாவட்டம் தற்போது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு தமிழ் கலாசார நிகழ்வுகளுடன்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (12) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது, காரில் பயணித்த...
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில்...
வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து...
நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தமையினால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது. இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
டித்வா புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஜனவரி 20 வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும் 32 பிரதேச மையங்களும்...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியா...
Loading posts...
All posts loaded
No more posts
