நல்லூர்க் கந்தனின் திருவிழாவில் வெளி வீதியுலா இடை நிறுத்தம்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழாவில் நேற்று மாலை திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து கந்தன் வெளி வீதியுலா வரும் காட்சி நிறுத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கற்பூர திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. காலை... Read more »

வரணி சிமிழ் கண்ணகி ஆலயத்தில் சத்தியாக்கிரகம்!

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து சமூக மக்களிற்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமாரும்... Read more »

சமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா!! – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்!!!

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில்... Read more »

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு... Read more »

காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்வோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து... Read more »

இந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை! அமைச்சரவையில் தீர்மானம்!!

இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மிருக பலி கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காக பின்பற்றப்பட்டு வருகின்றது.... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்று காலை... Read more »

மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு!

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக்... Read more »

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார். ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள்... Read more »

கொடியேற்றத்தை நிறுத்திய தர்மகத்தா!! தீமை நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள்!!

அச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மேற்படி... Read more »

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த... Read more »

அந்தோனியார், குழந்தை இயேசுவின் திருசெரூபங்கள் விழுந்து உடைவு!

மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசெரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருத்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் , சோகமாக காணப்பட்டனர்.அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்றைய தினம் மாலை... Read more »

ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுப்பு

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும்... Read more »

யாழில் பிள்ளையாரின் தேர் குடைசாய்வு!! அச்சத்தில் பக்தர்கள்!!

காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில், முன்னால் பவனி வந்த பிள்ளையார் தேர் குடை சாய்ந்தது. மழை பெய்த ஈரலிப்பால் நிலத்தில் காணப்பட்ட சகதிநிலை காரணமாக பள்ளம் ஒன்றுக்குள் தேர்ச் சில்லும் புதையுண்டு தேர் குடை சாய்ந்ததாக ஆலயத்தினர்... Read more »

யாழ்ப்பாணம் வருகின்றார் இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா!

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான நாளை 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. “சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும்... Read more »

சிதம்பரம் செல்வோருக்கான பதிவுகள் ஆரம்பம்

தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்லும் பயணிகளுக்கான பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள்,... Read more »

மிருகபலியிட்டு வேள்வியை நடத்த வடக்கு முழுவதும் முற்றாகத் தடை!

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அதிகாரத்துக்குட்பட்ட எல்லைகளில் உள்ள ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்விநடத்த முற்றாகத் தடைசெய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று கட்டளையிட்டார். குடாநாட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்ளி நடத்துவதற்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை... Read more »

வியாழன் தான் நவராத்திரி ஆரம்பம்

நவராத்திரி ஆரம்பம் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை முறையே 20.09.2017 புதன் கிழமை மற்றும் 21.09.2017... Read more »

புனித ஹஜ் பெருநாள் இன்று!!

உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.... Read more »

பொலிஸாருக்கு நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் பாராட்டு

யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 28 ஆம் முதல், 25 நாட்களுக்கு இடம்பெற்றது. இதற்மைய நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்... Read more »