யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்!!, மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும் : வி.மணிவண்ணன்

யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியப் பேரவை யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றினால் அப்போதைய முதல்வராக இருந்த... Read more »

தமிழ்தேசிய கூட்டமைப்பினை நம்பி வாக்களித்து இன்றளவும் நாங்கள் கண்ணீருடனேயே வாழ்கிறோம்: அரசியல் கைதிகளின் உறவினர்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு உதவும் என நம்பியே வாக்களித்தோம். ஆனால் அவர்களால் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கூட்டமைப்பு உண்மையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிய நடவடிக்கை எதனையுமே இதுவரையில் எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டார்கள். 3... Read more »

சுதந்திர தின நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிபு?

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் நாளை காலை 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரிட்டன் இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப்... Read more »

வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பதை அனுமதிக்க முடியாது : மணிவண்ணண்

வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதையும் 1000 விகாரைகள் அமைப்பது என்பதையும் அனுமதிக்க முடியாது என தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் யாழ். மாநகர வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணண் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில்... Read more »

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் : மஹிந்த ராஜபக்ஷ

ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன... Read more »

நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ இடமளியேன் : ஜனாதிபதி

நாட்டைத் துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

யாழிலிருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி கப்பல் போக்குவரத்து! : பிரதமர் அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரிலிருந்து தமிழகம் – இராமேஸ்வரத்துக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை... Read more »

கோமாளித்தன அரசியலுக்காவா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன? : மணிவண்ணன் கேள்வி

இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக்... Read more »

காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.குறிப்பாக கடற்படையினரது வசமிருந்த கட்டுப்பாட்டு பகுதிகளினில் இந்நடவடிக்கைகள் துல்லியமாக கடற்படையின் விசேட பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. தீவத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள வணபிதா ஜிம்பிறவுண்... Read more »

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் : கஜேந்திரகுமார்

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே... Read more »

சுதந்திர தினத்தன்று பருத்தித்துறை- பொன்னாலை வீதி விடுவிப்பு!!

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே... Read more »

அரசியல் கைதிகளுக்கு சிறையிலுள்ளவர்களால் ஆபத்து! : முதல்வருக்கு அவசர மனு

தமிழ் அரசியல் கைதிகளை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் தடுத்து வைத்துள்ளதால் அவர்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வரை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்,... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்து பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் மற்றும் ரயில்வே இயந்திர பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிமுதல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதோடு, காலை 9 மணிமுதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு 2கோடி!! முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில்!!

இனத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் போராளிகளோ... Read more »

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி

தமிழர் தாயக பிரதேசங்களில் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள் இனத்தின் விடுதலைக்கு பொருத்தமற்றவர்கள்: மாவை

அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக... Read more »

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சுகாஸ்

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் : அங்கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு... Read more »

இந்தியாவினது அழுத்தமே எமது நிலை சீரடைய உதவும் :முதலமைச்சர்

இந்தியா மற்றும் சர்வதேசத்தினது அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும் என வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தின விசேட நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து... Read more »

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான... Read more »