Ad Widget

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.

அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது உணர்திறன் உள்ளவர்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காற்றின் மாசு அளவு இன்று (01) சிறிதளவு குறையக்கூடும், மேலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts