- Wednesday
- December 17th, 2025
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத்...
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில்...
கிளிநொச்சி – குஞ்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணம் செய்த டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் பல தடவைகள் நிறுத்துமாறு கூறியதாகவும், எனினும் குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா நாளை காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், இல்லையேல் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் திங்கட்கிழமை (15.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 10ஆவது நாளான நேற்று ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னம், திறப்பு கோர்வை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தையடுத்து ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்று (11) 3 மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு புதன்கிழமை (10) இடம்பெற்றது. குறித்த அகழ்வின் போது பார்வையாளராக 10ஆம் திகதி புதன்கிழமையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலன் அவர்களும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார். இந்த அகழ்வு பணியின்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதனால், ஏ- 9 வீதியுடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததோடு, குறித்த பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து...
உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச்...
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்த வேலை...
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்யச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்திய மீனவர்களை கைதுசெய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி...
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்த பொலிஸார் குறித்த சிதைவுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும்,...
வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 லட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழுவால் கைது...
யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு...
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். () அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால் இரத்த உறைவு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும்...
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய...
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகளும்...
Loading posts...
All posts loaded
No more posts
