யாழில் தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – மீண்டுமொரு சம்பவம் பதிவு!

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், நேற்று வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது... Read more »

காணிப் பிணக்கு கைகலப்பாக மாறியதில் முதியவர் அடித்துக் கொலை – சந்தேகநபர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸார்!!!

காணித் தகராறு ஒன்று கைகலப்பாக மாறியதில் அரச உத்தியோகத்தர்கள் இருவரின் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாழில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் வடக்கு எழுதுமாட்டுவாளைச் சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது-78)... Read more »

யாழ்-கொழும்பு அதிசொகுசு பஸ் உரிமையாளருக்கு சிறை மற்றும் ரூபா ஒரு லட்சம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார். பேருந்து உரிமையாளரின் சிறைத் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு... Read more »

யாழில் கர்ப்பிணியின் மீது மண்வெட்டி பிடியினால் தாக்குதல்!!

சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும், தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த... Read more »

யாழில் வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும் நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தநிலையில் அவை தொடர்பில் யாழ்ப்பாண... Read more »

முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறை!

அநுராதபுரம் வில்பத்து பிராந்திய கஜபா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உள்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் கொல்ப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்... Read more »

வலி.வடக்கில் சிறுமி மீது துஷ்பிரயோகம்

வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டதுடன்,... Read more »

யாழில் நகை கடைக்குள் புகுந்த தாக்கல் நடத்திய குழு!! பொலிஸார் மீதும் தாக்குதல்!!

யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாருடைய பிடியில் இருந்து லாவகமாக தப்பி சென்றிருக்கின்றது. நேற்று முன்தின்ம் மாலை 6 மணியளவில் யாழ்.பிரதான வீதியில் நகை கடை... Read more »

கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் கைது

கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்த குறித்த நபர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக... Read more »

வாழ்வாதார உதவியில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி!!

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் விநியோகத்தின்போது லஞ்சம் பெற்ற பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் கையும்களவுமாக கைது செய்யப்பட்டார். பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தான... Read more »

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியவருக்கு விளக்கமறியல்!

மனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி... Read more »

பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது

வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவி மீது பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த மாணவி படுகாயமடைந்தார்.... Read more »

மாணவி மீது அதிபர் தாக்குதல் – நீதி கோருகிறார் தந்தை!

வவுனியா ஓமந்தையில் பாடசாலை மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதென்றும், ஊடகங்களும் சமூக அமைப்புக்களும்... Read more »

பொலிஸில் தஞ்சமடைந்த மாமனை அங்கு புகுந்து தாக்கிய மருமகன்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சமடைந்த மனைவியின் தந்தை மீது அங்கு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை பாதுகாக்கும் வகையில் அவரைத் தப்பிக்கவிட்ட பொலிஸாரின் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும் அது தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து... Read more »

தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞன் கைது!

கோப்பாய் பொலிஸில் தனக்கு செல்வாக்கு உள்ளது என தெனாவட்டாகப் பேசிய இளைஞனை கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சந்தி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரவு கடமையில் நின்றுள்ளார்கள். அதன் போது... Read more »

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரால் இரண்டு தடவைகளுக்கு மேல் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் முதல்வர் இமானுவேல் ஆனல்ட் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்த நிலையில் இந்த... Read more »

இணுவில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவனொருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை தொடர்ந்து அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். இணுவில்... Read more »

காவல்துறையினர் மீது தாக்குதல் – உப காவல்துறை பரிசோதகர் காயம்

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது அவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் என்று கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ‘கெற்பேலி கிராமத்தில் வழமை... Read more »

போலி நாணயத்தாள் விநியோகஸ்த்தர்கள், சாவகச்சேரி காவற்துறையினரால் கைது!

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை விநியோகிக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு தென்மராட்சி பகுதியில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று புதன்கிழமை மாலை (09.01.19) போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை... Read more »

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா- இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கனராயன்குளத்தைச் சேர்ந்த தர்மதாசன் செல்வநாயகம் (வயது 48) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் குறித்த பகுதியிலுள்ள ஒருவர், கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத்... Read more »