கேப்பாபுலவு முகாமுக்குள் நுழைய முற்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 672 ஆவது நாளாக கேப்பாபுலவு... Read more »

முறிகண்டியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு!

முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன. ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து... Read more »

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள... Read more »

கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடு குள முகாமைத்துவம் காரணமா? விசாரணைக்குழுவை நியமித்தார் ஆளுனர்

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடுகுளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்ட முறைமைதான் காரணம், இரணைமடு பொறியியலாளர்கள் அதற்கு பொறுப்புகூற வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தை ஆராய மூவர் அடங்கிய குழுவை வடக்கு ஆளுனர் நேற்று நியமித்துள்ளார். யாழ் பல்கலைகழக... Read more »

முல்லைத்தீவில் சிறுவனைக்கொண்டு குளோரின் கரைத்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் இந்துபுரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ள நீர் கலந்த கிணறுகளை சுத்திகரிப்பதற்காக குளோரின் கரைப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டிற்காக இரு ஊழியர்கள் கடமையில்... Read more »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கச்சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி... Read more »

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்!!

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மயில்வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 26.12.2018 நேற்றையதினம் வெள்ள நிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்… கடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப் பாதிக்கப்பட்டு அவற்றின்... Read more »

கிளிநொச்சியில் மீண்டும் மழை: முகாம்களில் மக்கள் பரிதவிப்பு

கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால், மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் கிளிநொச்சியில் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள், காலநிலை நேற்று ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து வீடுகளுக்கு திருப்பினர். எனினும்,... Read more »

வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு: மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஈரட்டை... Read more »

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்

முல்லைத்தீவு கடற்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (புதன்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையிலேயே குறித்த ஸ்கூட்டர் வகையினைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியுள்ளது. கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக பழுதடைந்து துருப்பிடித்த... Read more »

இராணுவத்தினரிடமிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர்... Read more »

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது. நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட... Read more »

முல்லைத்தீவு கடலில் கரை ஒதுங்கிய புலிக்கொடி

முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழ தேசிய கொடியான புலிக்கொடி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது. Read more »

கிளிநொச்சியில் பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை... Read more »

முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில்... Read more »

இரணைமடு குளத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் நினைவு கல்லினை மீளவும் நிறுவ நடவடிக்கை

இரணைமடு குளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுனர் பணித்துள்ளார். 1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர்... Read more »

இளைஞனைப் பலியெடுத்த இரணைமடுக்குளம்!!

கிளி­நொச்சி இர­ணை­ம­டுக் குளத்­தின் வான் பாயும் பகு­திக்­குள் குளித்­துக் கொண்­டி­ருக்­கும் போது காணா­மல் போன இளை­ஞன் சில மணி நேரத் தேடு­த­லின் பின்­னர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார். சாவ­கச்­சேரி மீசா­லை­யைச் சேர்ந்த என்.டிலக்­சன் (வயது-21) என்ற இளை­ஞனே உயி­ரி­ழந்­துள்­ளார். நேற்று மாலை 4.30 மணி­ய­ள­வில் இர­ணை­ம­டுக்... Read more »

இரணைமடுக் குளத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்படுகின்றன – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை

இரணைமடுக் குளத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அதன் ஆறு வான் கதவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக... Read more »

முப்படையினருக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் வைத்து முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்... Read more »

முல்லைத்தீவில் கிராம அலுவலகருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் முன்னாள் போராளி மற்றும் பொதுமகன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அசாதரண முறை குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பணியிலிருந்த கிராம அலுவலகர் துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த... Read more »