வாசு­தேவ நாண­யக்காரவின் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த சுமந்­திரன்!

பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து செயற்­பட்­டன இது திட்­ட­மிட்ட சதி­யென கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்­வைத்த கோரிக்கை நியா­ய­மா­னது, சட்ட விதி­மு­றைக்கு... Read more »

கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவுள்ள சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்கள்

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில்... Read more »

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா : ராஜித

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும்... Read more »

யாழ் -பண்டாரவளை பஸ்ஸில் தீ விபத்து : 12 இராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்குப் பயணித்த தனியார் பஸ் தீவிபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் இராணுவத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. தியதலாவ, கஹகொல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயால் விபத்து இடம்பெற்றது.... Read more »

தாமரை மொட்டிலிருந்து அமைதியே மலரும்: தந்தையை எச்சரித்த சம்பந்தனிற்கு நாமல் பதில்!

தாமரை மொட்டிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்ததன்... Read more »

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரவை அனுமதி... Read more »

மஹிந்தவுடன் இணையும் மைத்திரி?

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே... Read more »

நான் பதவி விலக அவசியமில்லை : பிரதமர் ரணில்

அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம்... Read more »

தாதியொருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் இரானுவத்தினரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி கைது!

கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் கப்டன் தர இராணுவ அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது... Read more »

மகிந்த எமக்கு எதிரியில்லை ! அவர் நல்ல தலைவர் !! சேர்ந்து பணியாற்ற சம்பந்தன் அழைப்பு !!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை.... Read more »

ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயார்- சுமந்திரன்

புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாக மாறியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை... Read more »

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை : ராஜித

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும்... Read more »

ஈழம் சிறிதாகிவிட்டது- மஹிந்த

வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற... Read more »

நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை : மஹிந்த

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில்... Read more »

“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற... Read more »

மைத்திரியை கொலை செய்ய முயன்ற மஹிந்த!: அம்பலமாகும் இரகசியங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார்.... Read more »

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கு காரணம்: ஜனாதிபதி

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர்... Read more »

சேதமடைந்த, கிழிந்த நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி முக்கிற அறிவிப்பு!

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன இதனை தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும்... Read more »

சிறிதரனும் 2 கோடி வாங்கினார் : ஆதாரத்துடன் அம்பலம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இரண்டுகோடி ரூபாவை அபிவிருத்தி நிதி எனும் பெயரில் பெற்றுக்கொண்டமையை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற... Read more »

சுதந்திர தின நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிபு?

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் நாளை காலை 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரிட்டன் இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப்... Read more »