- Wednesday
- October 14th, 2026
தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும். இதுவரை...
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார். எயார்பஸ் விமானங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றையதினம் (08) முற்பகல் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார். ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இவ்வாறாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார்.
மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து...
பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும். அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய...
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கும், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் வசதியாக இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுகிறது. பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, விடைத்தாள்களை மீள்மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள்...
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலைமையுடன் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தொடர்ந்து குடிநீரை விநியோகிப்பதற்குத் தேசிய அனரத்த நிவாரண சேவை மையம் நடவடிக்கை...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார். எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில்...
தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி பெறமாட்டார்கள். அந்த அறிவிப்பின்படி, 2026 செப்டம்பர் 15, அன்று திருத்தப்பட்ட விசா விலக்குத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, 21 நாடுகளின் குடிமக்கள் இந்நாட்டிற்கான விசா இல்லா...
கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைப் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2,947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டம்பர்...
ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அஸூர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2013...
மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்குளம் கடல் பகுதியில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் தோணி ஒன்றில் மூன்று மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளனர். இதன்போது,...
இந்திய அரசின் ஆதரவுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்திய - இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் தலைமையில் நேற்று (03) முற்பகல் அமைச்சு வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி...
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர்...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02)...
விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக...
எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகள்,...
Loading posts...
All posts loaded
No more posts
