முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ்...

எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது...
Ad Widget

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள்!!

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு,...

வெளியாகிறது தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும்-05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப்...

இன்று நண்பகல் 12:10 மணிக்கு சூரியன் உச்சியில் இருக்கும்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...

ரவி கருணாநாயக்க கைது!!

விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க திங்கட்கிழமை (31) காலை சுமார் 8:15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப்...

ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!

திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில்...

எல்நினோ தாக்கம்!! – மீண்டும் மின்வெட்டு!!

எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக்...

இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவிப்பு: சொந்த இறுதிச்சடங்கிற்கே நடந்து வந்த நபர்!

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன...

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம்!!

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (24) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டமூலத்தின் மூலம் விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச்...

காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு!!

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி...

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய...

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்!!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில்...

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவச்சீட்டு!!

தனியார் துறை ஊழியர்கள் இணைய வழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்காக அண்மையில் இணையவழி பருவச்சீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...

தேசிய துக்க தினங்கள் அறிவிப்பு!

இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணிசமான பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின்...

தரமற்ற தலைக்கவசம் விற்பனை!! 200,000/- அபராதம்!!

தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு...
Loading posts...

All posts loaded

No more posts