Ad Widget

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ரயில்வே ஊழியர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகள் தவறியதால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படவிருந்த ரயில் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடால், கோட்டை ரயில் நிலையத்தில் நீண்ட தூர ரயில்களை இயக்குவதற்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கு தீர்வைக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை போக்க அரசாங்கமும் அதிகாரிகளும் தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் ரயில் நிலைய அதிபர்கள் பதவி விலகுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts