Ad Widget

ஜனாதிபதி பதிவிக்கு மும்முனை போட்டி ! ரணில், அநுரகுமார, டலஸ் களத்தில் !

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய , பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.

அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக விஜித ஹேரத் முன்மொழிய , அதனை ஹரிணி அமரசூரிய உறுதிப்படுத்தினார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமையால் , வேட்புமனு தாக்கல் செய்துள்ள மூவரில் ஒருவர் நாளை பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்ததையடுத்து நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணி வரை சமை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Posts