- Tuesday
- October 13th, 2026
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வின் சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில்...
உலகச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தாமல், மானியமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்....
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை...
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து...
இணையவழி பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மக்களின் அலட்சியத்தை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். ”தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரத்தின் கடவுச்சொல் (PIN), இணைய வங்கி கடவுச்சொல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP)...
போட்டிப் பரீட்சையின்றி இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்களா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் அத்துடன் இன்றுவரை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்....
வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடியாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லாதபோதிலும், அதனை நோக்கி வீசும் பலத்த காற்று காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது...
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி வழங்கியமை உள்ளிட்ட 23,270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது. நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன்,சுஜீவ நிஷ்சங்க ஆகியோரைக் கொண்ட கொழும்பு மேல்...
உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் இலங்கையிலேயே மிக அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தப் பெறுமதி 43 சதவீதமாகும். 13 வருட பாடசாலைக் காலத்தையும், அதனைத் தொடர்ந்த உயர்கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நாட்டின் கற்றறிந்த, புத்திஜீவி மாணவர்...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் சிவராசா அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரரான சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடனான கலந்துரையாடலின் போது,...
சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள 13 தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போதுள்ள...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பஸ்களும் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பாரிய போக்குவரத்து...
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்....
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதுடன், அவர் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க...
கடந்த சில மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவாகியுள்ளதுடன், அவ்வாறு பதிவான மழைவீழ்ச்சியின் அளவு 104 மில்லி மீற்றர் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் களுபஹன பகுதியில் 95.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் 85.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம...
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலவச சுகாதாரத் துறையை...
சீதுவை நகர் பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் போயகனே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவார். உயிரிழந்த நபர் குறித்த விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த அவ்விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது. இவர்...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில்...
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜயநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கோட்டை நீதிவான்...
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸ் மா அதிபரினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த செப்டம்பர் 12...
Loading posts...
All posts loaded
No more posts
