- Friday
- November 7th, 2025
WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட...
சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும், அவை பணியகத்திடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே, வெளிநாட்டு வேலை...
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் , அச்சுவேலி பொலிஸ் நிலையங்களில் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இரு இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண கிளையிலும் இளைஞர்கள் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதாகவும்...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொதுமுகாமையாளர் எந்திரி எஸ்.பிரபாகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா – மன்னார் 220 கிலோ...
எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார். வர்த்தமானியின்படி, வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த...
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வட்ஸ் அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வட்ஸ்அப்...
நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 - 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாக தெரிவித்தனர். நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது என சுவாச நோய் வைத்திய...
செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொது மக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 05 ஆம் திகதி 13.30 மணியிலிருந்து 17.00 மணி வரை காட்சிப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. பொது மக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது...
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - 071 8591882 பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி -...
தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக காவல்துறை சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு அளிக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் திண்மக் கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,...
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 மற்றும் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டணக் கணிக்கைக் கையேட்டின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டண திருத்தத்துக்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), கடந்த 16 ஆம்...
கடந்த வாரத்தில் நாட்டில் இரண்டு துயரமான குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் சிறு பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் பதிவான முதல் சம்பவத்தில், ஒரு வீட்டில் காலியான குளிர்பான போத்தலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலை உட்கொண்டதால் ஒரு குழந்தை இறந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் குழந்தையை...
உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் எனவும்,...
அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,...
சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் விற்கப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், அவ்வாறான பென்சில்களில் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும்...
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு அதற்கான விசேட...
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு...
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP), சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. e-Traffic செயலியானது போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தொடர்புடைய சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க பொதுமக்களுக்கு அனுமதி...
Loading posts...
All posts loaded
No more posts
