எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம்...

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும்

தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும் இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினரால் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில்...
Ad Widget

தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

நாடளாவிள ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிமன் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில்...

அதிக வெப்பம் கண்ணுக்கு ஆபத்து! தேசிய வைத்திய சாலை எச்சரிக்கை!!

சமகாலத்தில் நிலவிவரும் அதிக சூரிய வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஐ.எல். மொஹமட் ரிபாஸ் தெரிவித்துள்ளார். சூரிய வெப்பம் அதிகமாக காணப்படும் காலப் பொழுதான, முற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேவையற்ற பயணங்களைத்...

வயதெல்லை அடைந்தாலும் ஊழியர் சேமலாப நிதியைப் பெற முடியாது

ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை மீளப் பெறுவதற்கு குறித்த வயதெல்லையை அடைந்திருந்த போதிலும், குறித்த நபர் வேறு தொழிலில் இணைந்திருந்தால், நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என ஊழியர் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கீழ், ஒரு ஆண் ஊழியர் 55 வயது நிறைவடைந்த பின்னரும், ஒரு பெண் ஊழியர் 50...

வடக்கு கிழக்கு சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா: லைக்கா

இலங்கையின் வடக்கு கிழக்கில், 200 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளத் தயார் என லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், லைக்கா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியினையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பூந்தோட்டம்...

மருத்துவ பீடத்துக்கு அனுமதி பெற உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு அவசியம்

அரச மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என்பவற்றுக்கு ஒரு மாணவன் பிரவேசிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விஞ்ஞான துறையில் 2 ஏ, சித்திகளையும், 1 பீ. சித்தியையும் பெற்றிருக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது. மருத்துவ பீடமொன்று பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் அடங்கிய அறிக்கையில்...

கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட அடுக்கு மாடியைத் தக்கவைக்க இராணுவம் முயற்சி!

பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளுடன்...

மஹிந்த கால படுகொலைகள் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் பொது எதிரணி காணாமல் போகும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளிப்படுத்துவோம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விரைவில் வீழ்த்துவோம்...

மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கவுள்ள வடக்கு, கிழக்கு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும்...

தகவல் வழங்கியும் பொலிஸார் வரவில்லை : மக்கள் விசனம்

நீர்வேலி, மாசியன் சந்தி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் அசட்டையுடன் நடந்து கொண்டதாக, பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நவக்கிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை, பொல்லால் தாக்கி விட்டு அவரது மகள் அணிந்திருந்த 1...

பகடிவதை செய்த மாணவர்களுக்கு மாகாபொல புலமைப் பரிசில், விடுதி வசதிகள் இல்லை!!

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள்,...

சுகாதாரதுறையில் தாதிமாரின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை

வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை உருவாக்கும் நோக்கில் இலவச சுகாதார சேவையிலுள்ள மனிதவளங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆயிரத்து 300 தாதிமாருக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. 2013, 2014 காலப்பகுதியில் தாதிமாருக்கான வெற்றிடங்கள் கூடுதலாக காணப்பட்டதனாலேயே தாதிமாரின் இடமாற்றங்களுக்கு இடமளிக்கப்படவில்லை . எதிர்காலத்தில் தாதிமாரின் எண்ணிக்கையை 50 ஆயிரம்...

பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்த நடவடிக்கை

பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிற்றல் மயப்படுத்தப்படவுள்ளது. இது தொடாபாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தாதவது: இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில் நிர்மாணிக்கப்பட்டுகிறது என்றார். இதற்காக 50 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. இந்தப் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. பரீட்சை நடாத்துதல், விடைத்தாள் பரீட்சித்தல்,...

வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்

அளவுக்கு அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம். வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது. 0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால் முறைப்பாடுகளை வழங்க முடியும். வாகனங்களின் புகைப் பரிசோதனையை...

தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில்!

தேசிய மீலாதுன் நபி விழாவை யாழ்ப்பாணத்தில் இம்முறை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய மீலாதுன் நபி விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதன் மூலம் அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு...

மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு

சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆலய உற்சவத்தையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இன்று காலை உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக...

மீள்குடியேற்றத்திற்கு இராணுவமே தடையாக உள்ளது; வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் தொடர்ந்தும் பெருமளவில் நிலைகொண்டுள்ள இராணுவம் உட்பட அரச படையினரே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்சி டெல் தலைமையிலான பிரதிநிதிகள் வட மாகாண முதலமைச்சரை சந்தித்த போது...

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்...

கமல் வீட்டில் தீ விபத்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கமல்!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நள்ளிரவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமல், புகைமூட்டத்திற்கு நடுவே படி வழியாக இறங்கி வெளியேறினார். இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: என் வீட்டில் தீ விபத்து...
Loading posts...

All posts loaded

No more posts