திரையுலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது? : இளையராஜா வருத்தம்

‘கபாலி’ படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்து வரும் புதிய படம் ‘எங்க அம்மா ராணி’. இப்படத்தை பாணி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் சமுத்திரகனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படம் வருகிற மே 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து...

விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்

கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே...
Ad Widget

விக்ரமுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் `சாமி' படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2' விலும் நடிக்க...

மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் : அலன் டொனால்ட்

மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை அணிக்கு...

யாழ்ப்பாணத்தில் சர்வதேச நடன தின நிகழ்வு

சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பிரபல நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவான நடன அளிக்கைகளின் தொகுப்பான '' ஆடல் அரங்கம் '' நடன நிகழ்வு (29.04.2017) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. பொம்மலாட்டக் குழுவினரின் மான் ஆட்டம் , மயில் ஆட்டம் ,...

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடப்படுகின்றது. பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இத்தினம் பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல்...

சுற்றுலா மையங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை: முதலமைச்சர்

வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல இயற்கைச் சுற்றுலா மையங்கள் அமைந்துள்ள போதும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரைப் பகுதியில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ யினை நேறறு (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....

ஜனாதிபதியை சந்திக்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ஆண்டுகாலமாக தீர்வின்றி போராடிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். குறித்த சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்திப்பின் போது, குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் மக்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு...

சம்பந்தரின் சதித்திட்டத்திற்கு முதல்வர் விக்கி உட்பட பலர் உடந்தை!!! (காணொளி இணைப்பு)

நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்ட திரு சம்பந்தன் அவர்கள் திட்டமிட்டே காய்நகர்த்தல்களை செய்துவருவதாகவும் அதற்கு முதல்வர் விக்கி உட்பட மாகாணசபை உறுப்பினர் அனந்தி உட்பட பலர் பயன்படுத்தப்படுவதாகவும் பகிரங்கமாக குற்றசாட்டியுள்ளார் கஜேந்திரகுமார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் இதனை தெரிவித்தார். காலஅவகாசம் வழங்கவேண்டாம்...

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினை கூட்டமைப்பில் இருந்து விலக்க நடவடிக்கை!

தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய இருவரையும் அதேபோன்று தமிழரசுக் கட்சியினையும் தொடர்ந்தும் அவதூறு பரப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயல்பாடு தொடர்பில் ஆராய்ந்து கூட்டணி உயர் பீடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம்(2) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இக்...

5ஆம் திகதி இலங்கை ழுழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம்!

சயிட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நகை திருட்டு தொடர்பில் ஒருவர் கைது

“புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த நேரம் உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுண் தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 7 இலட்சத்து 20...

கீரி சுற்றுலா கடற்கரையை திறந்துவைத்தார் வடக்கு முதல்வர்

மன்னார் நகரசபை பிரிவிற்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. மன்னார் நகரசபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் நகரசபையின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு...

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இவ் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்களின் உறவினர்கள் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியதுடன், பொதுச் சுடரினை...

புதுக்குடியிருப்பில் படையெனத் திரண்ட கூட்டுறவாளர்கள்

புதுக்குடியிருப்பு நகரமே அதிர்ந்தது என்று குறிப்பிடும் அளவுக்கு நேற்று திங்கட்கிழமை (01.05.2017) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க புதுக்குடியிப்பு சிவன்கோவில் முன்றலில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பித்த மேதினப் பேரணியில் வடக்கு மாகாணத்தின்...

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் அலன் டொனால்ட்!

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ணத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கை அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக சம்பிக்க ராமநாயக்க செயற்படுகிறார்.இந்நிலையில் எலன் டொனால்ட் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக...

யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது

பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான ஒன்பது பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் யாழ்கோ நிறுவனத்தின் தலைவர் இ.சர்வேஸ்வராவிடம் கையளித்துள்ளார். இந்தக் கையளிப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.04.2107) திருநெல்வேலியில் அமைந்துள்ள...

உரும்பிராய் பொதுச் சந்தை சுகாதாரமற்ற நிலையில்! உரிய தரப்பினர் கவனம் எடுப்பார்களா?

உரும்பிராய் பொதுச் சந்தையில் சுகாதாரமற்ற நிலை காணப்பட்டு வருவதனால் பொருட்களை நுகர்வதற்கு மக்கள் தயக்கம் காட்டிவருவதாக சந்தைக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்தையில் இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதன் கழிவுகள் உரிய முறையில்அகற்றப்படாமையினால் சந்தையில் ஒரு பகுதியில் ஏராளமான புழுக்கள் நிறைந்து பார்ப்பதற்கு அருவருக்கத்த வகையில் துர்நாற்றம் வீசிக் காணப்படுகின்றது. மேலும்...

‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ : மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென...

சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்

கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...
Loading posts...

All posts loaded

No more posts