- Wednesday
- May 20th, 2026
வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை...
சிறைச்சாலையில் வைத்து கைதிகள் தாககப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றசட்டத்தரணிகள் நேற்று நண்பகலிற்கு பின்னர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார். வழக்கின் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நாளை ஆசிரியர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெறஉள்ளது. 1996 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களிால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் 1988 தொடக்கம் 1996 வரையில் கல்விகற்று 1996 உயர்தரப்பிரிவின் ஊடாக வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்களால் கௌரவிக்கப்படுகின்றனர். நாளை நண்பகல் சபாலிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறுகின்றதது. நிகழ்வுக்காக...
அமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர்ராகவும் அனந்தி சசிதரன் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெறும். முதலமைச்சர் விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று...
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட மிதிவெடி மற்றும் கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்ட விதம் தொடர்பில் அமெரிக்கா ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜொனி மிதிவெடி மற்றும் பல ஆயுதங்களுக்கு விடுதலை புலிகள் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள் வியப்பளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்படைந்துள்ளனர். வெடிபொருள் அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், கூட்டமைப்பை கூறுபோட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டால் அது தமிழ் மக்களுக்கு...
வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பில் இருந்து 27 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ளது மயிலிட்டித் துறைமுகம். இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை துறைமுகம் உட்பட துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஜே-249 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 54 #ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டு மாவட்ட அரச...
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பின்பற்ற வேண்டிய ஊடக விதிமுறையைக் மீறி மலிங்க கருத்து வெளியிட்ட காரணத்தால்,மலிங்க மீது விசாரணைகள் மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று மாலை அந்த குழுவினர்...
சிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமைப்பயிற்சிவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள்...
“ஈழத்தமிழ் மக்களின் தொன்மங்கள் மீதும் அவர் தம் அடையாளங்கள் மீதும் குறிவைத்துத் தாக்கி, தமிழரை இனவழிப்புச் செய்கின்ற மூலோபாயத்தின் கருவிகளாக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். கடந்த வாரம், கிளிநொச்சி நகரில் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த “ஈழம்”...
வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ள அமைச்சர்களான த.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேகசன் ஆகியோரின் அமைச்சுக்களான, முறையே கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை முதலமைச்சர்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாம் இந்த விடயத்தை நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி...
கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென தெரிவித்ததாக, கேப்பாப்பிலவு மக்கள் குறிப்பிடுகின்றனர். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கேப்பாப்பிலவு மக்கள், அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர். ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்கவிடமே...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு...
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் இன்றும் (28) பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் துணை இணைப்பாளர் எச்.கே.காரிய வசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் பிரதான 3400 க்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த பணிநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நுவரஎலிய, கண்டி, காலி மற்றும் கொழும்பு...
அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மீது மூவரடங்கிய குழு முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.குறித்த மூவரடங்கிய குழுவில் , இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் த சில்வா , பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா...
அண்மைக் காலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவர்கள் விபத்துக்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. திடீர் விபத்துக்கள், டெங்கு நோய் போன்றன மாணவர்களின் மரணத்துக்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
