சிம்பாவே, இலங்கை டெஸ்ட் போட்டி : தடுமாறுகிறது சிம்பாப்வே!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிறேம் கிறீமர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சிஹாபா மற்றும் ஹமில்டன் மசகட்சா நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் ரங்கன...

சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம் 2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம் 3. ஆண்டின் சிறந்த...
Ad Widget

தமிழ் பற்றாளரும் நடிகருமான ஓவியர் வீரசந்தானம் காலமானார்

பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான...

இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுரேஷ்ரெய்னா, டுவைன்பிராவோ, அஸ்வின், மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என்று பல ஆல்ரவுண்டர்களுடன் வலுவான அணியாக...

இலங்கைத் தமிழர்கள் 10 பேர் திருச்சி சிறையில் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில்...

பிரபாகரனை தப்பிக்க செய்ததாக எழும் குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை: ரொபேர்ட் ஓ பிளேக்

இலங்கை ஆயுதப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவியதாக எம்மீதான குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாரா குழுவொன்றுடனான கலந்துரையாடலின்போது இவ்வாறு தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள்...

வட.மாகாண பாதுகாப்பு பிரிவில் தமிழ் இளைஞர்களை இணைக்க வேண்டும் : முதலமைச்சர்

வட. மாகாணத்தில் காணப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் தமிழ் இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட. மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். கைதடியில் அமைந்துள்ள வட. மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த...

யாழ். நகர சந்தைக்கட்டடத்தை விரைவாக அமைக்க வேண்டும் : வணிகர் கழகம் கோரிக்கை

1982 ஆம் ஆண்டு எரிக்கபட்ட யாழ் .நகர சந்தைக் கட்டடம், மீள அமைக்கப்படுவதை வரவேற்பதோடு, அதனை விரைவாக அமைத்துத் தர வேண்டும் என யாழ் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 1982ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில், மிகப் பழமை வாய்ந்ததும் யாழ்ப்பாண சரித்திரத்தில் அடையாளச் சின்னமாக இடம்பெற்ற நகர மத்தியில் அமைந்திருந்த...

ஊடகவியலாளருக்கு அழைப்பாணை: ‘பின்னணி என்ன’???

“யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு, குற்றப்புலனாய்வு துறையால் அனுப்பப்பட்ட அழைப்பாணையின் பின்னணி தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றபுலனாய்வுத்துறையால் யாழ். ஊடகவியாளாலர் த.பிரதீபனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், யாழ். ஊடகவியலாளர்...

யாழில் தனது புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட நடிகை ரம்பா

யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன். இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது....

ஆனையிறவில் சிதறிக்கிடக்கும் மோட்டார் செல்கள்

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது குறித்த பகுதி நீரின்றி காணப்படும் நிலையில் பெருமளவில் மோட்டார் செல்கள்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய தமிழ் மொழி தின விழா யாழ்ப்பாணத்தில்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழி தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன....

தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்!

தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் இலங்கையர்கள் தென்கொரியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில்...

பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்கல்!

பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு,...

வட. மாகாணம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும்: பிரதமர்

நாட்டின் ஏனைய பகுதிகளை போன்று, வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் உட்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், வட. மாகாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பொலிஸார் உரிய...

பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை : பிரதமர்

பயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை என பிரரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடுகளும் எதிர்நோக்கி வரும் பயங்கரவாதப் பிரச்சினைக்கு தீர்வு காண பிராந்திய வலய நாடுகள் பொது இலக்குடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்....

மணற்காடு இளைஞனொருவன் பலியான சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை

மணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர்...

சுவிஸ்குமாரை விடுவித்த பொலிஸ் அதிகாரிக்கு குற்றச்சாட்டு பத்திரம்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நேற்று (புதன்கிழமை) இக்குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அது குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு...

அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும்...
Loading posts...

All posts loaded

No more posts