Ad Widget

ஆனையிறவில் சிதறிக்கிடக்கும் மோட்டார் செல்கள்

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது குறித்த பகுதி நீரின்றி காணப்படும் நிலையில் பெருமளவில் மோட்டார் செல்கள் மண்ணில் புதையுண்ட நிலையிலும், துருப்பிடித்தும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிலையில், குறித்த பகுதியில் காணப்படும் வெடிபொருட்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக பல பிரதேசங்களில் இவ்வாறு வெடிபொருட்கள் பரவலாக காணப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆனையிறவு தட்டுவன்கொட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 300இற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வசித்து வருகின்ற நிலையில், வெடிபொருட்களால் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்நிலையில், அதிகாரிகள் இவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts