- Wednesday
- May 20th, 2026
வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களுக்கு நிதி, அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் துணியிலான பைகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார். அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம்,...
யாழ். சுன்னாகம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, இன்று காலை மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா...
யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர முப்படையினரும் களத்தில் இறக்கப் படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் கூறியது தொடர்பில்...
வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்று இரவு சுண்ணாகத்தின் மத்தியில் இடம்பெற்றுள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் 21 வயது மதிக்கத்தக்க இருவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்ப பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கும் , மருத்துவ பீடத்திற்கான 08 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் அடிப்படையில் ஒப்பந்தங்களுக்காக முறையே 424.43 மில்லியன் ரூபாவும் மற்றும் 564.67 மில்லியன்...
கொக்குவில் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறும் பணித்துள்ளார்....
வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் சிரேஸ்ட சட்டத்தரணியும், சமாதான நீதவானுமாகிய வீ.ரீ.சிவலிங்கத்தின் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படுகின்றது. முதலில்...
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு...
வடக்கில் தற்போது நடைபெறும் குற்றச்செயல்களுடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதானது, இலங்கையில் ஜனநாயக மரபுகளுக்கு இடமில்லையென சர்வதேசத்தில் எதிரொலிக்கச் செய்யுமென ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இக்கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னுமொரு ஆயுத அல்லது பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என்ற அடிப்படையில், முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல இராஜாங்க அமைச்சர் விஜயகலா உதவியதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டால் அவர் மீது விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வித்தியா கொலை...
தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி சம்மேளனமும் சில தினங்களாக முட்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். பெப்சி தொழிலாளர்களை மட்டுமே படத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் பயங்கரமான பரபரப்பு...
வலிகாமம் வடக்கு - தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, யுத்தத்தால் சிதைவடைந்த நிலையிலுள்ள ஆலயங்களை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பணிப்புரைக்கமையப் புனரமைக்க, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, மயிலிட்டி பிரதேசத்திலுள்ள கண்ணகை அம்மன் ஆலயம், முருகன் ஆலயம் என்பவற்றுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,...
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் நடைபெற்ற சுவிஸ் தேசிய தினநிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தி, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கியே ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ”இந்தவிடயம் தொடர்பாக நான் பாதுகாப்புச் செயலாளருடனும்,...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, விசேட பொலிஸ் விசாரணை குழுவொன்று அவுஸ்ரேலியா செல்லவுள்ளது. குறித்த சந்தேகநபரை நாடுகடத்த தேவையான ஆவணங்களுடன் அந்நாட்டிற்குச் செல்லும் விசாரணைக் குழு, அந்நாட்டு அரசாங்கத்திடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. இக் குழுவினர் இவ்வாரம் அவுஸ்ரேலியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமந்திரனை...
நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20...
அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச...
Loading posts...
All posts loaded
No more posts
