பேதங்களற்ற வகையில் அரசியல் தீர்வு: பிரதமர்

எந்தவொரு நாட்டு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து...

பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும் : அனந்தி சசிதரன்

வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இடம்பெற்ற துணியிலான பைகளைப் துணியிலான பைகளைத் தயாரிப்பதற்கான அறிமுக விழா விழாவில் கலந்துகொண்டு...
Ad Widget

காரை மோதியது ரயில் : யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் நேற்று பிற்பகல் விபத்து நடந்துள்ளது. தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியதியுள்ளது. மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புகையிரத கேற் விபத்தொன்றினால் பழுதடைந்து பூட்டமுடியாத நிலையில் இருந்தபோது இது குறித்து...

இரா சம்பந்தன் அவர்களுக்கு வடமாகாணசபை அங்கத்தவர் நியமனம் தொடர்பில் மாவை கடிதம்!

வடமாகாண சபையில் மேலதிக ஆசனத்திற்கு உறுப்பினர் நியமித்தமை தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம்

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் ஸ்கை ட்ரேடர்ஸ்...

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் குறித்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு இளைஞசர்கள் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய...

நல்லூர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாரின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில்

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான கெ.ஜீ.பி குமுதுனி முன்னாள் கொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன், இற்றைக்கு 05 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...

வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் போய்விடும்: வடக்கு முதல்வர்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்....

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்: ஜனாதிபதி

ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர்,...

வடக்கு முதல்வரின் கருத்து ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் அளிக்கின்றது : ஸ்ரீகாந்தா

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகும். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

இலங்கை இந்தியா 2வது டெஸ்ட் போட்டி: வலுவான இலக்கை நோக்கி இந்தியா

இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் தடுமாறினாலும் வலுவான இலக்கை நோக்கி இந்திய அணி நகர்ந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கம் செலுத்திவருகின்றது இந்திய அணி. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில்...

இலங்கையில் சந்திரக் கிரகணம்

எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவின் வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....

தனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்

இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என...

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட இருக்கின்றன. இதேவேளை நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்புகொள்ள வலியுறுத்தல்

ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள்...

பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை!

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த விடயங்களை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறியுள்ளார். இது...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் யாசகம் கேட்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ரயில் நிலைய பாதுகாப்புப்...

மகேஸ்வரன் குடும்பத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள்: துவரகேஸ்வரன் ஆதங்கம்

மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும், அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து...

வித்தியா கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான...
Loading posts...

All posts loaded

No more posts