Ad Widget

எனக்கு பிடிக்காத சொற்களில் ஒன்று ‘வேலை நிறுத்தம்’! : ரஜினி

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி சம்மேளனமும் சில தினங்களாக முட்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். பெப்சி தொழிலாளர்களை மட்டுமே படத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் பயங்கரமான பரபரப்பு நிலவியது. விஷாலின் இந்த அறிக்கைக்கு பதிலடியாக பெப்சி நிர்வாகம் ஆகஸ்ட் ஒன்று முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

இதனை மீறியும் சில பட நிறுவனங்கள் தங்களது படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில் பெப்சி நிர்வாக தலைவர் ஆர் கே செல்வமணி இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து பிரச்சனையை சுமூக தீர்வு எட்டி தரும்படி கோரிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

‘ எனக்கு பிடிக்காத சில சொற்களில் ‘வேலை நிறுத்தம்’ என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் முறையில் எனது அன்பான வேண்டுகோள்’

என தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Related Posts