பருத்தித்துறையில் காட்டுமிரண்டியாய் மாறிய சிறியதந்தை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறியதந்தை மற்றும் சம்பவத்தை வேடிக்கை பார்த்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (25) காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிறியதந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்குள்ளன...

இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்!

அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில்...
Ad Widget

விமானங்களை வீழ்த்தும் 5 ஆயிரத்து 700 வெடிகுண்டுகள் மயிலிட்டியில் மீட்பு

காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை...

தியாகதீபம் திலீபனுக்கு மக்கள் திரண்டு அஞ்சலி

இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு நேற்று நல்லூரில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை...

மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டி தமிழர்களை வாய்மூடச்சொல்கிறது மைத்திரி அரசு! :பொ.ஐங்கரநேசன்

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு, தமிழ்மக்களின் தாயகம்,தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் வேணவாக்களை மிக நாசுக்காக நிராகரித்துள்ளது. மாறாக, நாட்டில் ஏற்கனவே கோலோச்சுகின்ற பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை உறுதி செய்வதாகவே அமைந்திருக்கிறது. தமிழ்மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்தால் சிங்கள இனவாதத்தைத் தூண்டி மகிந்த ராஜபக்ச மீண்டும் பலம்பெற்று விடுவார் என்று அரசு தரப்புச் சொல்கிறது. மகிந்த என்ற...

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும்

ஊவா, வடக்கு, மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மாத்தளை, அநுராதபுரம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த...

யாழில் கண்கவர் நிகழ்வுகளுடன் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்

உலக சுற்றுலா தினம் வடமாகாண சுற்றுலா துறை அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் புகையிரத வீதியில் இருந்து காலை 9 மணியளவில் வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. பின்னர், யாழ். வைத்தியசாலை வீதியூடாக சென்று கே.கே.எஸ் வீதியூடாக பண்ணைவரை சென்று நிறைவடைந்தது. தனியார் சுற்றுலா நிறுவனங்களையும் இணைத்து...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 214 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் சம்பந்தப்பட்டவா்களினால் வழங்கப்படாத நிலையில் சர்வதேசம் தமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என கோரி இருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். வவுனியா கந்தசாமி...

எவரையும் உதாசீனம் செய்யும் நோக்கம் கூட்டமைப்புக்கு கிடையாது: இரா. சம்பந்தன்

‘எவரையும் உதாசீனம் செய்யாமல் எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களில் ஒருமித்து நாங்கள் தீா்மானங்களை எடுக்க விரும்புகிறோம்’ என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது....

கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கு: இரத்த மாதிரிகள் சமர்ப்பிப்பு!

கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேரி கம்சிகா கொலை வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இ.சபேஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரியும், சந்தேக நபர்களிடம் இருந்து...

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கைது!

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய...

மன்னாரில் சட்ட விரோதமாக அமைக்கப்படும் விகாரை: ஜனாதிபதிக்கு கடிதம்!

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த பௌத்த விகாரையை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையிலேயே...

தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள்

தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை.... தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு யாழ் மாவட்டம் 2017 புரட்டாதி 24 தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய அரசிடம் நீதி கோரி காந்திய வழியில் நீராகாரம் அருந்தாது தன்னுடலை மெழுகாய் உருக்கி...

ஆஸிக்கு எதிரான தொடர் இந்தியா வசம்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி தொடரை தன்வசப்படுத்தியது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என தொடரில் முன்னிலைபெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும்...

தமிழ் மக்களுக்காக சர்வதேச விசாரணைக்கான நீதிமன்றம் ஒன்று அவசியம் : எம்.கே. சிவாஜிலிங்கம்

இலங்கை அரசாங்கத்தின் இராணுவம் யுத்த குற்றம் புரிந்துள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தின் ஊடாக புலப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதம் : அமைச்சர் விஜித் விஜயமுனி

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி செய்சா தெரிவித்தார். மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர்...

வட்டுக்கோட்டை வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார் ராஜித

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கலாநிதி காந்தநேசன் ரதினி தலைமையில், இந்நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது. அத்துடன் யாழ். தீவக மக்களின் சுகாதாரசேவையை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு 68 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக அலகுக்கான இரண்டு மாடி கட்டடத்தொகுதியையும் சுகாதார அமைச்சர் திறந்துவைத்தார்....

சட்டக் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சை 30 ஆம் திகதி

இலங்கை சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2018 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே இப்போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், குறித்த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டை கடந்த...

யாழ்ப்பாணத்தில் பலம் பெறவுள்ளோம்!! பஷில் ராஜபக்ச

எம்மிடம் உள்ள மக்கள் பலத்தினை நிரூபிக்க நாம் யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தாலும், நாம் மக்கள் நீதிமன்றத்தில்...

சுகாதார அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்!

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள்...
Loading posts...

All posts loaded

No more posts