- Monday
- May 18th, 2026
புங்குடுதீவில் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாருக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதேபோன்ற கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கான மிகஉயர்வான முறையில் பங்களிப்பு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம்...
யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 17ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (19) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. போர் சூழலில்...
நீதியமைச்சரும் , சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாமையினால் அவர்கள் நாடு திரும்பியதும் அவர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவினை கூறுவதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி , நேற்று (19) மதியம் 12.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்று...
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (19) வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் அரசியல் கைதிகள் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழமைபோல கால அவகாசம் கோரிய...
முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைந்த முச்சக்கரவண்டியில் மூலம் ஏற்படும் விபத்துக்களால் வருடாந்த பல உயிர்கள் இல்லாமல் போவதுடன் பலர் அங்கவீனர்களாக ஆகுவதைத் தடுக்கும் நோக்கில் அதற்கு மாற்றீடாக இந்த நான்கு சக்கர வாகனத்தை...
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு 4ஆயிரத்து 999 பேர் உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இந்த வருடத்தில் 4பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளனர் எனவும் யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.குடாநாட்டில் உள்ள 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் கீழ் டெங்கு நோய் பரவியுள்ளன. மூன்று நாட்களுக்கு மேல்...
யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான...
யாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்களைத் தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம் முன்னெடுக்குமென நோர்வே உறுதியளித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து...
பாரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்ட கொத்துக் குண்டுகளை இலங்கை ராணுவத்தினர் இறுதிக்கட்ட போரின் போது பயன்படுத்தியதாக ஏற்கனவே பல ஆதாரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுகுறித்த புகைப்பட ஆதாரமொன்று வெளிவந்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான பிரான்ஸிஸ் ஹரிசன் (Frances Harrison), தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில்...
முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றுமொரு மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரைப் பிரதேசத்தில் நீராடியபோது காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவுபெற குறைந்தது 5 ஆண்டுகள் எடுக்கும் என சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார். 5 குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை முனவைத்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “வித்தியா...
தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) மாத்திரம் இச் சம்பவம் பதிவாகியுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் மந்திகை வைத்தியசாலை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாள்வெட்டு, கத்திக்குத்து போன்றவற்றிற்கு இலக்காகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இடம்பெற்று வரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவை மீறியே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதென குறிப்பிட்டுள்ள பொலிஸ்மா அதிபர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைஎடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்....
முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்டு காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நேற்று பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒரு...
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய, நீதியரசர் அமரசேகர முன்னிலையில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை ஆராயாமல் வழக்கு ஆவணங்களில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறிச் சென்று தனித்துவமாக செயற்பட முனைவார்களானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே...
தெற்குப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் வெளிச்சம் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்றிரவு 8.45 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்ட, களுத்தறை, கொழும்பு பிரதேசத்துக்கும் இந்த சப்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கொழும்புப் பல்கலைக்கழக வானியல்துறையின் பேராசிரியர்...
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டங்களை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாக்கிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது....
உலக வாழ் இந்துக்கள் தமது சமய வழிகாட்டல்களுக்கு அமைவாக தீமை மற்றும் அறியாமை ஆகிய இருளை விட்டகன்று ஞான ஒளியேற்றி தமது உள்ளங்கள், இல்லங்கள், கோவில்களை அலங்கரித்து தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்த தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதையிட்டு பெரிதும் மகிழ்வடைகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து...
அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ தீபாவளித் திருநாள் வழி வகைசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: உலகுக்கு கதிரவன்,சந்திரன் ஆகிய கோள்கள் ஒளி தருகின்றன.இவற்றைவிட மனிதர்களால் ஏற்றப்படும்...
Loading posts...
All posts loaded
No more posts
