- Monday
- May 18th, 2026
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். விசா பெறுவதற்கு அவரது வங்கி கணக்கில் 20 இலட்ச ரூபாய்...
வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைப்பாரென எதிர்ப்பார்ப்பதாக உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காய் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) 239 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் வவுனியாவுக்கு விஜயம் செய்யும்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டுமென, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குச் வந்துள்ள அமைச்சரிடம், குறித்த அரசியல் கைதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வெளிநாட்டிற்குச் சென்றுள்ள சட்டமா அதிபர்...
தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ”இன்று பலர் முன்னாள்...
கல்வியற்கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த சுமார் மூவாயிரத்து 626 பேருக்கு புதிதாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இவ்ர்களுக்கான...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் நேற்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது....
தென்மராட்சி பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மூன்றாம் கட்ட உலர் உணவுப்பொருட்கள் குறித்த பிரதேச பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளைகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலக இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இலகு வேலைத்திட்டத்தில் பங்கு பற்றிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக...
முச்சக்கரவண்டிகளில் கட்டணத்துக்கான வாசிப்புமானி பொருத்தப்படுவது அவசியம் ஆகும். 35வயதிற்கு குறைந்த நபர்கள் வாடகைக்கு முச்சக்கரவண்டிகளை செலுத்தாத வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் சிவில் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அமைச்சர்...
வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.மறைமாவட்ட குருக்களுக்கான ஓய்வு விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் கடற்படைத் தளபதி ரவீஸ் சின்னையா ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்படி விடுதியினைத் திறந்து வைத்துள்ளனர். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு கடற்படைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த ஆயர் இல்லம் கடற்படை வீரர்களின் பொறியில்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட...
விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தததால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வைப் பெறுவது கடினம் எனவும், யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கொண்டு செயற்படுமாறும் டெல்லிக்குப் பயணம்மேற்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இக்கருத்தரங்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் புதுடெல்லியில் கருத்தரங்கொன்று...
தமது விடுதலைக்கான பெரும் பொறுப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பொறுப்பெடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு கண்ணீர்க் கடிதம் அனுப்பியுள்ளனர். “யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு, பூட்டிய சிறையில் இருந்து ஓர் அன்புரிமை வேண்டுகோள்!” எனத் தலைப்பிட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர்...
அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2010...
வடமாகாணத்தில் 347 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கில் உளவியல் பாடம் உட்பட சில பாடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய, 347 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் 47பேர் உளவியல் பாட ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்ட குறித்த 347 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் நியமனம் வழங்கப்படும் என...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் ஒரு வருட நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நினைவுதின நிகழ்வில், இவ்விரு மாணவர்களுக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில், சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன்,...
சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இன்றையதினம் வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ...
தற்போது சிறையில் உள்ள புலிகள் மிகவும் மோசமான குற்றவாளிகள், அவர்களுக்கு சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து உரையாற்றிய அவர், “ ஆயுதம் ஏந்தி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்த விடுதலைப் புலிகளை...
வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். படுகாயங்களுக்கு உள்ளான நால்வரும் வவுனியா...
வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு சென்றிருந்த போதும், பிரதமர் அதனை செவிமடுக்காது வேறு விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தியதாக வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தல், வடக்கு கிழக்கு பகுதிகளில் இளைஞர்கள் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சினை,...
தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து...
Loading posts...
All posts loaded
No more posts
