- Sunday
- May 17th, 2026
தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி) தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்பாளர்கள்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நெடுங்கேணி நகரில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில்...
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் ,அவருடைய பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை திகதி இடம் பெறவுள்ளது. குறித்த நிகழ்வு தொடர்பாக மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்...
யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனியாகவிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி கப்பம் கோரியவர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் இந்த பெண்ணின் தனியாக இருந்த வேளையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இந்த நபர்...
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை...
சீரடி சாயி பாபா இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுபடுத்தி அதில் வெற்றியுங் கண்டார் : முதலமைச்சர்
சீரடி சாயி பாபாவின் வியாழக்கிழமை பஜனை கொட்டாஞ்சேனை புதிய செட்டித் தெரு, சாயி மந்திரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்வறது இதில் வடமாகாண முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா………. அன்புடைய சாயி பக்தர்களே, சகோதர சகோதரிகளே! என்னை ஒரு சில வார்த்தைகள் இங்கு பேச அழைத்தமைக்காக உங்கள் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக்...
முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூரட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர். அந்தவகையில், கூட்டமைப்பினருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான...
கேப்பாப்புலவில், இலங்கை ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டது. காணிகள் விடுக்கப்பட்ட போதிலும், காணி அளவீடுகளின் பின்னரே மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில், இலங்கைப் படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை...
பூமி எமது தாய். எமது மொழியில் மட்டும் அல்ல் உலகில் பேசப்படுகின்ற எல்லா மொழிகளிலுமே பூமித்தாய் என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் பிள்ளைகள் போல நாங்கள் நடந்து கொள்வதில்லை. தலைமுறைகளுக்கும் சொத்துச் சேர்ப்பதற்கு ஆசைப்படுகின்ற நாங்கள் அளவுகணக்கில்லாமல் வளங்களைச் சுரண்டிப் பூமியில் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவுதான்...
வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (28) 12.30 மணியளவில் வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவுவேளை வாள்களுடன் நடமாடிய கும்பலைத் துரத்திச் சென்ற மாவடி இளைஞர்கள், கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப்...
யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் தொற்றியுள்ள இனங்காணப்படாத ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவின் பணிப்புறைக்கு அமைய குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தற்போதைய நிலையில் இந்த பரிசோதனையின் பொருட்டு வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்று வடமாகாணத்திற்கு சென்றுள்ளது....
மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையகுற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார். “சந்தேகநபர்கள் 18,20 வயதினர். சங்கானை, கட்டுடையைச் சோ்ந்தவர்கள். சங்கானை – சேச் வீதி கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற நகை,...
ஊழலற்ற ஆட்சி! நடந்த ஊழல் மோசடிகளுக்கு உடன் விசாரணை என்பதை வலியுறுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி தலைமையகத்தில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (புதன்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. சொன்னதைச் செய்தவர்கள்! செய்வதை சொல்பவர் என்ற மகுட வாக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...
வட. மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும், இ.கௌதமனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது...
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் இவ்வாறு பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கு முற்பகல் 10 மணியளவில் அனுப்பி...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...
கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன? பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள்...
யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் , “கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர்...
அரசாங்கத்துடன் இணைந்து யாரெல்லாம் செயற்படுகின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஊடகங்கள் தான் அவற்றை தாமதமாக தெரிவிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
