இ.போ.ச தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதுடன் ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஒற்றிணைந்த...

ராணுவத்தின் பிடியிலுள்ள காணியை விடுவிக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியிடம் நீதிபதி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை...
Ad Widget

பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழு வடக்கிற்கு விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர், இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து, வடக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள்...

மதவாதத்துக்கு மக்கள் முன்னணியில் இடமில்லை

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற...

விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களும் தாதியர் சேவைக்கு!

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்களையும் தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களை தாதியர் சேவைக்கும் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாதியருக்கான வெற்றிடம் நிலவுவதால், வைத்தியசாலைகளில் சிரமங்கள் ஏற்படுவதையும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு,...

திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தாவிடின் தவறவிட்டுவிடுவோம்: என்.வேதநாயகன்

மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தாவிடின் அவற்றை தவறவிட்டு விடுவோம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார். 2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர்...

எம் இன விடுதலைக்காக போராடியவர்களை ஒதுக்கிவிட முடியாது: மாவை

தங்களுடைய உயிரைத் துச்சமாக நினைத்து எங்களின் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களை நாங்கள் தூக்கி வீசிவிட முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில்...

யாழ். மேல் நீதிமன்றில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை!!

யாழ். மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்று யாழ். மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இதுவரை மேல்...

வடமாகாண முதலமைச்சரின் கொடும்பாவியை எரிப்போம்?

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காவிடின் அவர்கள் தமது உச்சக்கட்ட ஆத்திரத்தால் வடக்கு மாகாண முதலமைச்சரின் கொடும்பாவியை எரிப்பார்கள். அதற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற சங்கம் பொறுப்புக் கூறாது. இவ்வாறு ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிராகசம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வடபிராந்திய...

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆய்வு

கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்வில் ஈடுபட்டனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடுகின்றது. “தூய கரங்கள் -...

புத்தாண்டு தினமான நேற்று யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

புத்தாண்டு தினமான நேற்று யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியை சேர்ந்த 23 வயதான ரவிராஜ் மற்றும் 33 வயதான க்ரைன்சன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். மாலை குறித்த இருவரும் மணியம் தோட்டம் பகுதியில் வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது கொழும்புத்துறை சந்திக்கு...

இ.போ.ச. ஊழியர்களின் போராட்டத்திற்கு பின்னணி யார்?

இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தின் பின்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உந்துதலாக உள்ளார்களா எனும் கேள்விக்கு பணிப் பகிஷ்கரிப்பை நடத்திவரும் தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண...

தமிழ் அரசியல் தலைவர்கள் வேறுபட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும்: விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்ப்பார்களாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிதாக மலரும் 2018ஆம் ஆண்டு...

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இவ்வருடத்தின் முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீள திறப்படுகின்றன. க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்படும் 58 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பமாவதோடு, குறித்த 58 பாடசாலைகளும்...

நாங்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல ! நெகிழச் செய்த வயதான பெண்மணி

நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர் மக்கள் நடக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பேரவையின் ஆதரவாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் விளக்கக் கூட்ட நிகழ்வென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்....

தமிழ்த்தேசிய பேரவை வேட்பாளர்கள் நல்லைக்குருமணிகளிடம் ஆசி பெற்றனர்!

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 09.30 மணியளவில் யாழ் சின்மயாமிஷன் சுவாமிகள்...

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் யாழ் ஆயரிம் ஆசிபெற்றனர்

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று...

தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆற்றலை பரீச்சிப்பதற்காக முதலாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாபெரும் விளையாட்டு போட்டியில் ஆகக்கூடிய வெற்றிகளை வட மாகாண அணி பெற்றுள்ளனர். தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த விளையாட்டு போட்டி சமீபத்தில் திவலப்பிட்டிய தேசிய இளைஞர் படையணி விளையாட்டு மைதானத்தில்...

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு ; மிகுதி காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் வசமிருந்த காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றயதினம் மக்கள் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்புலவுவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம்...

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதி உதவி!

வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 90 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வடக்கில் புதைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 190 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் முன்வந்தது. இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது....
Loading posts...

All posts loaded

No more posts