- Saturday
- May 9th, 2026
யாழ்.மூளாய் பகுதியில் நேற்று மாலை 6.00 மணிக்கு இரண்டு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. அதனுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது. அதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து வீதியில் கூடி அது தொடர்பில் ஆராய்ந்த போது,மீண்டும் ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து மூளாய் பித்தனை சுடலை...
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று (புதன்கிழமை) காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர். மேலும் அந்த அடையாள அட்டைகள் கிழக்கைச்...
பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது. பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வழி மறித்த இருவர், ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். ஆசிரியர் மீண்டும் பாடசாலை நோக்கி தப்பியோடியுள்ளார். விரட்டிச் சென்ற கொள்ளையர்பள் பாடசாலை...
கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது,...
சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல்...
பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவச் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் நேற்று (14.05.19) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. அதன்போதும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின்...
கடந்த காலங்களில் காணாமல் போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்பு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். இந்த தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜயசேகர ஊடாக இராணுவத் தளபத்திக்கு அனுப்பியுள்ளதாகவும்...
ஊரடங்கு வேளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளை கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கள மக்கள்,நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து...
நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஆளுநர் பொலிசாரின் தேவைக்கு தற்காலிகமாக வாகனங்களை வழங்கும்...
இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்த ஐ.நா.வின் விசேட ஆலோசகர் கரன் ஸ்மித்...
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில குறித்த நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது....
நேற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலைமைகள் தொடர்பாக, ஊழல் எதிர்ப்பு செயலணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, காவற்துறை தலைமையக அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த...
கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்குள்ளாவது குறித்து கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்ட நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்,...
நான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது. கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை ஒன்றுக்கு விற்றமின் மாத்திரைக்குப் பதிலாக குருதி அழுத்த நோய்க்கு உபயோகிக்கும்...
சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்கிறது ; இன முறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டால் கடூழியச் சிறை
இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டத்தை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும்...
அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மகால்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சிங்கள ராவய...
தென்னிலங்கையில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வன்முறையில் முஸ்லிம் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற கலகத்தின்போது படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார். குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கும்பல் ஒன்று அவரை கூர்மையான ஆயுதங்களுடன் தாக்கியமை காரணமாகவே...
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எமது விருப்பம். சட்டம், ஒழுங்கை மீறும் வகையில்...
Loading posts...
All posts loaded
No more posts
