நல்லூர் கோவிலை தாக்­கு­வ­தற்கு திட்­டமாம்?

யாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் நாளை சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அநா­ம­தேயக் கடி­தத்தை அனுப்­பி­ வைத்­தவர் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவரைக் கைது செய்­யு­மாறு வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். தமிழர் தாய­கத்தில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இந்த அநா­ம­தேயக் கடிதம் ஆளு­நரின் அலு­வ­ல­கத்­துக்குக்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!

இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும்...
Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர். வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உணவுத்...

தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு 3 தடவைகள் ரிஷாட் கோரினார்! – இராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என...

தாக்குதல் சம்பவங்கள் – கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு நேரடி தொடர்பு

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு...

பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது!!

‘எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார்’ என தமிழ் மொழியில் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, இவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொங்கல் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவிழாக்களை...

யாழ்.பல்கலை மே 22ஆம் திகதி ஆரம்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பீடாதிபதிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து உத்தியோகபூர்வ பதிவாளர் அறிவிப்பார் என்று அறிய முடிகின்றது. பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக பதிவாளர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புத்...

யுத்த வெற்றியின் 10 ஆண்டு பூர்த்தி விழா 19 ஆம் திகதி

30 வருடம் இந்நாட்டில் நிலவிய யுத்த நிறைவு வெற்றியின் 10 ஆண்டு பூர்த்தி விழா, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்று மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து...

குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது!!

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை ஒருவர் கைக்குண்டுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தை மகனுக்கு இடையே வாய்த்தர்க்கம்...

பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடாத்தப்படும்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் என்பன திட்டமிடப்பட்டவாறு நடாத்தப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் குறித்த பரீட்சைகளைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு பிள்ளைகளை...

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்திற்குள் பாாிய தேடுதல்!!

யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இன்று இராணவம், பொலிஸாா் இணைந்து பாாிய சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனா். எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைகழக நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய நாள் படையினருக்கு சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது 450 இராணுவத்தினர் மற்றும் 90 காவல்துறையினர்;...

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு...

யாழ். ரயில் நிலையத்தில் கைதாகிய வயோதிபப் பெண்ணிடம் மீட்கப்பட்டவை விளையாட்டு உபகரணங்கள்

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வயோதிப் பெண், வாய்மூல முறைப்பாடு எடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “வயோதிப் பெண் தனது பேரப் பிள்ளைகளுக்கு என ஜேர்மனியிலிருந்து இலத்திரனியல் விளையாட்டு உபகரணங்களை (Toys) எடுத்துவந்திருந்தார். அவற்றுக்கு றிமோல்ட் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர், வயோதிப் பெண்ணைக் கைது...

எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினம்

எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசாக் போயா தினங்களாக அதாவது விடுமுறை தினங்களாக இருப்பதாலேயே எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைவாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.

முஸ்லிம் கிராமங்களில் அச்சம் தொடர்கிறது !; சேத விபரங்கள் பல பில்லியன்கள்

வட மேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக பல பில்லியன் ரூபா சொத்து சேதங்கள் பதிவாகியுள்ள நிலையில், அக்கிராமங்களைச் சேர்ந்தவ்ர்களும், அதனை அண்மித்த அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். இந் நிலையில் வன்முறைகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்ப்ட்டுள்ள போதும், புதிதாக வன்முறைகள் உருவாவதை தடுக்கவும், கைதுகளை துரிதப்படுத்தவும் வட மேல்...

எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்: நீங்கள் வெளியேறுங்கள் – இராணுவத் தளபதிக்கு சிவாஜி பதில்

“நீங்கள் வெளியேறுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லையென்ற இராணுவத் தளபதியின் கருத்து தொடர்பாக, புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது தமிழ் மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறுமாறு ஒருபோதும்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின்...

யாழ்ப்பாணத்திலும் கால்வைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்!! உண்மை அம்பலமானது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின. இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டபோது அங்கு நிலக்கீழ் தளம் ஒன்று...

வைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts