யாழில் ஆலயத்தில் தொண்டாற்றியவர் மின்சாரம் தாக்கி மரணம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டநிலையில் குறித்த நபரைத் தாக்கியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்....

வடக்கில் கொரோனா தாக்கம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்!

வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்குரிய பிரத்தியோக பிரிவுகள் தற்போது வரையில் ஆரம்பிக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்வரும் காலத்தில் நிலைமைகள் மோசமடைந்தால் சிகிச்சை வழங்கும் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி.த.சத்தியமூர்த்தி பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கில் கொரோனா...
Ad Widget

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!!

லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம...

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய...

புத்தாண்டு நிறைவுறும்வரை கோரோனா ஒழிப்புக்கான தற்போதைய கட்டுப்பாட்டுக்கள் தொடரும்!!

புத்தாண்டு நிறைவுறும் வரை கோரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கோரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய...

யாழ்ப்பாணத்தில் இன்று 17 பேரின் மாதிரிகள் பரிசோதனை – எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை

யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றுத் தொடர்பில் 17 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தின் ஊடாக 17 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. கோரோனா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாணத்தில்...

14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கோரோனா தொற்று!!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பியவருக்கு 10 நாள்களின் பின் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி அவர்,...

வீடுகளுக்கு பூட்டுப் போட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கு வெளிநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்தவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தலை அலட்சியம் செய்து வெளியில் நடமாடுபவர்களின் வீடுகளுக்கு பூட்டுப் போட்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நேற்று இரவு பொதுச் சுகாதார அதிகாரிகளினால் ஒருவரின் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு காத்தாக்குடி...

முல்லைத்தீவில் இளைஞன் அடித்துக் கொலை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்றுமுன்தினம் (02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த...

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை,...

நாட்டில் இன்சுலின் பற்றாக்குறை!!

தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குள் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜெயந்த பண்டார, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்சுலின் பயன்படுத்தப்படுகின்றது என்றும் இதற்கு அரச மருத்துவமனைகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறினார். இன்சுலின்...

கோரோனாவால் இன்று உயிரிழந்தவருக்கு வேறு நோய் இல்லை – சுகாதார அமைச்சு

இலங்கையில் கோரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய ஹோமாகமவைச் சேர்ந்த 44 வயதுடையவர் இன்று அதிகாலை வெலிக்கந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தார். “இத்தாலியிலிருந்து மார்ச் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த அவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார்....

எந்த வருமானமும் அற்றவர்களிற்கும் உடனடியாக 5 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை!!-மாவட்டச் செயலாளர்

யாழ்ப்பாணம. மாவட்டத்தில் எந்த வருமானமும் அற்றவர்களிற்கும் உடனடியாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பணக் குடாநாட்டில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் குடும்பங்கள் தற்போது வாழ்கின்றனர். இவர்களில் அரச ஊழியர்கள் குடும்பம் , ஓய்வூதியர்கள் குடும்பம் என சுமார் 36 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதனைவிட 76 ஆயிரம்...

பொன்னாலையில் பற்றைக்குள் கசிப்பு குகை முற்றுகை!!

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில், பொன்னாலை பற்றைக்காட்டில் கசிப்பு குகை ஒன்று பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சட்டத்துக்கு புறம்பான கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது. கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த முற்றுகை நடவடிக்கை நேற்று (03)...

உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள்!! சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள் – கலாநிதி ஆறு.திருமுருகன்

“உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். வழிபாடுதான் இன்று அனைவருக்கும் மன வலிமைதரும். மருத்துவ உலகின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து , அனைவரும் நோய் பரவாது காக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குங்கள்” இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும்,தெல்லிப்பழைஶ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்தியுள்ளார். “சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள். சைவக் கோவில்களை சிலர் திட்டமிட்டு...

யாழ்ப்பாணத்தில் மூவருடன் நாட்டில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 159ஆக உயர்வு

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் மூன்று பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படுவர்களில் அரியாலையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறமி, 20 வயதுடைய இளைஞன் மற்றும் 36 வயதுடைய பெண்...

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை – எந்தவொரு வங்கி அட்டையையும் பயன்படுத்தி பணம் மீளப்பெற முடியும்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் நாளை நடமாடு வங்கிச் சேவையை நடத்த உள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை அறிவித்துள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை வழங்கப்படவுள்ளது என்று தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர்...

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!!

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ்...

கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 152ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் ஒருவர் இன்று (ஏப்ரல் 3) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 24 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நான்கு...

தனிநபர் மற்றும் வியாபார நிறுவனங்கள் பெறும் கடன் சலுகைகள் பற்றி மத்திய வங்கி விளக்கம்

50 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஆறுமாத மீள்நிதியிடல் வசதியை உருவாக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. கொவிட் – 19இன் தாக்கத்திற்குள்ளான தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் நிதி நிறுவனங்களுக்கு வழங்குகின்றது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொவிட் – 19இன்...
Loading posts...

All posts loaded

No more posts