- Tuesday
- May 5th, 2026
நாடுமுழுவதும் உள்ள மருந்தகங்களை நாளை (ஏப்ரல் 9) வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அனுமதிப்பத்திரம் (Curfew Pass) வழங்குவதற்கு புதிய நடைமுறையை கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மாவட்ட மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அமைய ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரம் நான்கு முறைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகம், மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகரின் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையம் என...
யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் தொடர்பில் இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்...
கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். எனவே நோயாளர்களைப் பராமரிப்பதற்கு ஏனைய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். “எனவே பொது மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்தால்...
கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், நக்டா எனப்படும் இலங்கை தேசிய...
இளஞ்சிவப்பு முழு நிலவு (Super Pink Moon ) வானில் இன்று தோன்கிறது. 2020-ம் ஆண்டில் இதுவே மிகப்பெரிய, பிரகாசமான முழு நிலவாக இருக்கும். நிலவு, முழு நிலவை (பௌர்ணமி) அடையும்போதும், பூமிக்கு மிக அருகில் (perigee) வரும்போதும் வானில் ‘சுப்பர் மூன்’ தோன்றுகிறது. இந்நிலையில் இந்த வசந்த காலத்தில் முதல் முழு நிலவாக சுப்பர்...
நாட்டில் கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச் ) சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 178 பேர் (ஜனவரியின் இனங்காணப்பட்ட சீனப் பெண் உள்பட) கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
வட்டுக்கோட்டை பகுதியில் உயிருக்கு போராடி ய நோயாளி ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நோயாளர் காவு வண்டி தாமதித்த தால் நோயாளி உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு நடைமுறையில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள்...
மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு கோரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 2...
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் பரப்பியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, நேற்றையதினம் (05) வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்றையதினமே...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது வைத்தியசாலையில் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 34 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து...
வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராட்டு நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த பரிசோதனை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சேவைக்கு பாராட்டு நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமை தொழில் நிமித்தம் வருகை தந்து, கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு தொழில் வழங்குனர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இன்று (ஏப்ரல் 6) திங்கட்கிழமை மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முற்பகல் 10 மணியளவில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று...
கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு...
இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கை பிரஜைகளிற்கு கொரோன தொற்றுள்ளமை மருத்துவபரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் இவர்களிற்பு வைரஸ் உள்ளமையை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இரு...
இன்று ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்...
மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப் பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகப்பூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் என யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தாவடியில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18...
அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர்...
Loading posts...
All posts loaded
No more posts
