யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் பரிசுத்தவார வழிபாடுகள் நேரலை ஒளிபரப்பு!!

நாட்டின் தற்போதைய சூழலில் மக்கள் ஒன்றுகூடமுடியாமை மற்றும் ஊரடங்கு காரணமாக இம்முறை பரிசுத்த வார, ஈஸ்டர் வழிபாடுகள் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளன. இந்த வழிபாடுகளில் ஆயர் இல்லத்தில் வசிக்கும் குருக்கள் மட்டும் இடம்பெறுகின்றன என்று அருட்தந்தை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர்...

இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என குறித்த சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அபாயக் கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கு 3 காரணிகளை...
Ad Widget

வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்!

கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான நான்காவது மரணம்

நான்காவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை:அரசு அறிவிப்பு

இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால் முன்பு தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் எப்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றதோ அன்றிலிருந்து இரண்டு வாரகாலத்தினுள்...

நீரிழிவு மற்றும் அகச்சுரப்பியல் நோயாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளநிலையில் நீரிழிவு மற்றும் அகச்சுரப்பியல் நோயாளர்கள் மருந்து பாவிக்கும் முறை தொடர்பாக சுகாதார அமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இந்த அறிவித்தலை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை தளர்த்த வேண்டாம் : வைத்திய அதிகாரிகள் சங்கம்

இடைக்கிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஒழிப்பு தொடர்பாக 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இடைக்கிடையே ஊரடங்குச் சட்டத்தை...

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனா வைரஸ் தொற்றில் உயிரிழப்பு

அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 3ஆவது உயிரிழப்பு குறித்து விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3ஆவது உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றின்காரணமாக மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார். 73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை...

காரைநகரில் விவசாயிகள் மீது தாக்குதல்!!

சிறு தானிய பயிர்ச் செய்கையைப் பாதுகாக்க கட்டாக்காலி கால்நடைகளை பிடிப்பதற்குச் சென்ற விவசாயிகள் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 5 பேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைநகர் மணியம் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மூன்று பேரைக்...

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலமநேற்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை...

இலங்கையில் கோரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. மருதானையைச் சேர்ந்த 72 வயதான இஸ்லாமியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு...

யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த...

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கோரோனா; அவர் பயணித்த விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்

மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை தந்த அனைவரையும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இராணுவத் தளபதியும் கோரனா பரவலைக் கட்டுப்பாட்டுத்தும் செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். மலேசியாவிலிருந்து மார்ச் 17ஆம் திகதி நாட்டுக்கு வந்த OD185 இலக்கமுடைய விமானத்தில் வருகை...

கடற்படையின் ஒத்துழைப்புடன், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!!

யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கொண்டு செல்ல இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது. கொரோனா வைரசு தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேவேளைத்திட்டங்களின் கீழ் அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்கமைய, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நயினாதீவு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்றும் இடம்பெற்றுவருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த...

ஏப்ரல் 2,3 மற்றும் 6ஆம் திகதிகளில் மருந்தகங்களைத் திறக்க அனுமதி

அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக நாளை ஏப்ரல் 2ஆம் திகதி மறுநாள் 3ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு அனுமதியளித்திருப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடிதம் மூலம்...

நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள கொரோனா எனப்படும் கொவிட்-19 வைரஸ் பற்றிய பல செய்திகள்...

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – 146 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால்...

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளி நோயாளர்களுக்கு மருத்துவ சேவை

காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக் ) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார். இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய்...

ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி

ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது. இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை...
Loading posts...

All posts loaded

No more posts