- Tuesday
- May 5th, 2026
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
யாழ்ப்பாணத்தில் கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளை அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின்போது தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்...
"கோவிட் 19 வைரஸ் கிருமியால் ஏற்படுகின்ற தொற்றுநோயாகும். இது உலகளாவிய ரீதியிலும், எமது நாட்டிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த ஆபத்தான தருணத்தில் முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை வேலைத்தலங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதி செய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று வடக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு முச்சகர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்களில் (Taxis) சாரதி தவிர்ந்து இருவர் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் 18 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்துச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகைக் கார்கள் சேவைகளுக்கு...
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் கோரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளை மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கு உதவும் வகையில் திட்டமிடுமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்....
மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் தூளுக்கான இந்த விலை நிர்ணயம் இன்று ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் பரவலையடுத்து சந்தையில் மஞ்சள் மற்றும்...
கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம்...
யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும்...
இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து பிற்போடப்பட்டு இருந்தது. எனினும் பொதுத்தேர்தலை திகதி குறிக்காமல் பிற்போட முடியாது என எழுந்த...
இலங்கை நடுத்தர மற்றும் சிறிய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் தொகுதியொன்று பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த சுகாதாரப் பாதுகாப்புமிக்க ஆடைகள் வைத்தியசாலைச் சேவைகள் சபையின் பணிப்பாளர் சங்கைக்குரிய ரஜவெல்ல சுபுதி தேரர் அவர்களின் ஆலோசனைப்படி கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் மற்றும் இலங்கை...
சுய அரசியல் இலாபத்திற்காக குடாநாட்டு மக்களை பிழையாக வழிநடத்த எத்தனிக்கும் “உதயன்” பத்திரிகை தொடர்ச்சியாக பிழையான மற்றும் பொய்யான செய்திகளையே வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஊரடங்கு அமுலில் இருந்த போதும் இப்பத்திரிகை அச்சடித்து பத்திரிகைகளை வெளியிட்டு விநியோகித்து வந்தது. இதன் மூலம், அரசாங்கம் ஊரடங்கு சட்டம் நடைமுறைகளை முழுமையாக புறந்தள்ளி செயற்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றை தடுக்கும்...
லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் நடாத்தும் அங்காடி ஊடாக லண்டனில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு...
இலங்கை அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் 'குருகெதர' புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. கொரோனோ வைரஸ்...
இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளாகி உறுதி செய்யப்பட்ட புதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார். இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும். இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு...
நாடுமுழுவதும் வரும் 24ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 27ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும்...
யாழ்ப்பாணம் மாவடத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக சூழமைவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்துள்ளோம். பெரிதும்...
உரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அயல் வீட்டாருடன் பேசியதற்காக இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நுழைந்து பொலிஸார் அட்டகாசம் புரிந்திருப்பதுடன், குடும்ப தலைவரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] இந்த சம்பவம்...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில், கொரோனா வைரஸ் அபாயத்தை கருத்திற் கொண்டு, இனைவரும் செயற்படவேண்டும' கொரோனா வைரசு தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். தமது சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி, பணிகளை ஆரம்பிக்குமாறு தொழில்புரிவோருக்கு இராணுவத்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில்...
Loading posts...
All posts loaded
No more posts
