Ad Widget

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது அவசியம்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில், கொரோனா வைரஸ் அபாயத்தை கருத்திற் கொண்டு, இனைவரும் செயற்படவேண்டும’

கொரோனா வைரசு தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தமது சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி, பணிகளை ஆரம்பிக்குமாறு தொழில்புரிவோருக்கு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனா வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் ஏற்பட்ட சுகாதார சூழ்நிலையை தக்கவைத்துக் கொள்வது அனைத்து பொமக்களினதும் பிரதான கடமையும் பொறுப்பும் ஆகும்.

நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதியும், பிரதமரும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்திலிருந்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இந்த ஊடரங்கு தளர்வை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தயவுசெய்து யாராவது வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பொது இடங்களில் குழுக்களாக ஒன்று சேராமல் வெளியே செல்லுங்கள் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் கூறினார்.

Related Posts