Ad Widget

மஞ்சள் தூளுக்கு விலை நிர்ணயம்

மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் தூளுக்கான இந்த விலை நிர்ணயம் இன்று ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் பரவலையடுத்து சந்தையில் மஞ்சள் மற்றும் மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts