புதிய வகை வரைஸ் காய்ச்சல் சீனாவில் கண்டறிவு!!

ஒரு தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வகைக் காய்ச்சல் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்தக் காய்ச்சல் சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது. பன்றிகளால் இந்த வைரஸ் பரவுகிறது. எனினும் ஆனால் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞான ஆய்வு இதழான பிஎன்ஏஎஸ் வெளியிட்டுள்ளது. ஜி4 என்று...

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது வடக்கு மக்களின் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் மற்றும் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகு...
Ad Widget

உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை அவசர கடிதம்

பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் விடுவித்துள்ள அறிவிப்பு தமிழரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என அக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை, “உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது” முதலான...

யாழில் இளைஞர்களை மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த...

அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் கட்டமாக திறப்பு!

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் இன்று (29), முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை...

முகக்கவசம் அணியாத 1,280 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாது பொது இடத்தில் நடமாடிய ஆயிரத்து 280 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் காணப்படும் நபர்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்ற நடைமுறையை பொலிஸ் தலைமையகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில்...

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அதிகாரம்!!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு இவ்வாறு அரச உயர்மட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில், மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை(29.06.2020 காலை - 8.15) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது....

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பி.கோணேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,...

இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே மாதம் வரையில் முழு ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் கட்டங்கட்டமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டு வந்த...

தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 50 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தொழிற்பயிற்சி நிலையங்களை முதலில் திறப்பதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கு...

இரண்டாம் சுற்று ஆபத்துக்கு வாய்ப்புண்டு- சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றனர்....

இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் பயனாளரிடம் கையளிக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி தெற்கு வசாவிளான் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடே நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணி ஒருவருக்கே குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம்...

தேவையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் உரிமை மக்களுக்கு கிடைத்துள்ளது – பிரதமர் மஹிந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலானது நிரூபிக்கப்பட்ட திறமைக்கு முன்னுரிமை வழங்கவும், நல்லாட்சியின் பொய் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் அனைத்து வாக்களர்களுக்கும் கிடைக்கும் அரியதொரு சந்தர்ப்பமாகும் என நம்புகிறேன். கோவிட் - 19 தொற்றினைக் கட்டுப்படுத்தியமை மூலம் எமது நாடு பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடிப்பதுடன், சூழலைப் பாதுகாத்து, முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரமொன்றில் ஈடுபடுமாறு அனைத்து...

திரையரங்குகளை ஜூன் 27 முதல் மீளத் திறக்க அனுமதி!!

நாடுமுழுவதுமுள்ள திரையரங்குகளை ஜூன் 27ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 20ஆம் திகதி கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து திரையரங்குகள் அனைத்தும் 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி திரையரங்குகளை வரும் ஜூன் 27ஆம் திகதி மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கலாசார...

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதா??

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை விசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தன்னிடமுள்ள ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்பிக்கவேண்டும் என்பதுடன் உரிய விசாரணைகளுக்கு வேண்டுகோள்...

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை!!!

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகன விபத்தில் உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக் கூட்ட நிகழ்வு நேற்று மாநகர தீயணைப்புப் படைப் பிரிவில் அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன்...

வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என யாழில் கைதான இளைஞர்கள் பிணையில் விடுவிப்பு

வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகாமையில் வைத்து 10 இளைஞர்கள் யாழ்ப்பாணம்...

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு!

மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு சலுகை காலம் வழஙக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸாரினால் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட தண்டப் பணம் விதிக்கப்பட்டிருந்த...

அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா

தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய...
Loading posts...

All posts loaded

No more posts