- Monday
- May 4th, 2026
காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா கடற்கரை மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கடற்படையினருக்கு கொரோனோ தொற்று...
பிரசார நடவடிக்கைகளுக்காக முகக்கவசங்களில் வேட்பாளர்களின் இலக்கங்கள்,பெயர்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வெளியிட முடியாது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நேற்றையதினம் (வியாழக்கிழமை) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவித்தல் அனைத்து பொலிஸ்...
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டண பட்டியல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராயவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நான்கு பேர் கொண்ட குழுவை மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர நியமித்துள்ளார். கோவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்கு உத்தரவு...
கோவிட் -19 நோய்த் தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கரவெட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் விழாக்கள் நடத்த 14 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துன்னாலையில் உள்ள மணி மண்டபம் ஒன்றே இவ்வாறு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த தடை கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் நேற்று ஜூலை முதலாம் இடம்பெற்ற திருமண நிகழ்வின்...
இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப்...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற பிரதமர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். அந்த சந்திப்பினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி...
முதலாம், இரண்டாம் தரம்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துப் பாடசாலைகளும் கடந்த (ஜூன் 29) திங்கட்கிழமை மீளத் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் ஜூலை 6ஆம் திகதி...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கடந்த...
காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே பிரதமர் மஹிந்த...
எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் சிறைச்சாலைக்குள் உள்ளனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று சிறைச்சாலைகளில் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் இருக்கிறார்கள். இவரகளின் சிலருக்கு வழக்கு கூட தொடரப்படவில்லை. அதேபோல், இராணுவத்தினரும் நீண்ட காலமாக சிறைகளில் இருக்கிறார்கள்....
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார். இம்முறை...
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று தமிழ் செய்தியாசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று பிரதமர்...
பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக...
காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத்...
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் தீவிரத்தன்மை தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய குறித்த சங்கத்தின் தலைவர் சேனல் பெர்னாண்டோ, கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளைத் தடுக்க குறைந்தபட்சம்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். சாவகச்சேரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால்...
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையிலேயே இந்தத் தொற்று நீக்கல் பணிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி கோண்டாவிலில் உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகளிலேயே குறித்த தொற்று நீக்கி...
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் சிறப்பு சுகாதாரக் குழு நியமிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பாடசாலை சுகாதார மருத்துவ அதிகாரி நித்தியானந்தா தெரிவித்தார். கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 105 நாள்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் பாடசாலை அதிபர்,...
Loading posts...
All posts loaded
No more posts
