- Monday
- May 4th, 2026
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன....
பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் இன்று முதல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இதேநேரம் 200க்கும் அதிக எண்ணிக்கையில்...
“விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு அழிக்கப்படக்கூடாது என்றும் தவறானவர்களை நீக்கி சரியானவர்களை தெரிவு செய்து கூட்டமைப்பு சரிசெய்யப்படவேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட பரிப்புரைகள் இன்று சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு பாரதூரமான நிலைமையினை உருவாக்கி இருக்கின்றது” இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியிலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ள அதன் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக்...
நடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு தேசிய பட்டியலின் மூலமும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இந்நிலையில், தேசியப் பட்டியலில் தெரிவாகும் உறுப்பினர் தொடர்பாக பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்...
இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றார். சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக...
“தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கட்சியின் பொதுச்செயலார் துரைராஜசிங்கம் ஆகியோர் மிக மோசமாக நடந்துகொண்டு வருகின்றனர். அதனைக் கவனத்தில் எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (07) அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
“சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன்” என பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மக்களின் அன்பை பெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே நாடாளுமன்றம் செல்லவேண்டும். இதனடிப்படையிலேயே தேர்தல் நடாத்தப்படுகின்றது. ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மாற்ற முனைவது அபத்தமானது. ஆமாம்...
வடக்கில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இருந்தார். தேர்தல் முடிவுகள்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இறுதி இரு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்பம் நீடித்து பதற்ற நிலை ஏற்பட்டத்தை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மீது அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார். இந்நிலையில் ஏனைய இருவர் சசிகலாவா, சித்தார்த்தனா என்ற...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனைவிட, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் எங்கள் மக்கள்...
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது...
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான யாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்...
திருநெல்வேலியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபகசக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல்...
வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு சிலர் வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் வெளிப்புற மற்றும் உட்புற காட்சிகளை இன்று மாலை 5.00...
கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் அட்டக்காசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டின்...
வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம்...
நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா...
Loading posts...
All posts loaded
No more posts
