நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இம்முறை...

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேர் அடுத்த ஒரு மாதத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்!!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்...
Ad Widget

நாளை பொதுத்தேர்தல்: எப்படி வாக்களிப்பது?

க்கள் கட்டாயம் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஒவ்வொரு மக்களும் பங்களித்திருக்க வேண்டும். சரியான நபர்களை இனம்கண்டு, பொதுமக்கள் வாக்களிக்காமல் இருப்பது, தவறானவர்களின் அரசியல் பிரவேசத்திற்கும் வழிவகுத்து விடும். வாக்களிக்க செல்லும் போது நாளை வாக்களிக்க செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்த செல்லுங்கள். முகக்கவசம்...

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்...

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா இல்லை; புதிய அறிவிப்பு – சுயதனிமைப்படுத்தப்பட்டோர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால்...

கோப்பாய் பொலிஸாரின் அட்டூழியம் தொடர்கிறது!!

இராணுவ வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம் சந்தி ) கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. திருநெல்வேலி சந்தியில் பக்கம் இருந்து கல்வியங்காடு சந்தியை நோக்கி மோட்டார்...

பேனாக்கள் விநியோகிக்க வேண்டாம் – யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.சி.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இம்முறை...

புதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது – வர்த்தமானி வெளியீடு

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற அமர்வு...

தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் – மஹிந்த நம்பிக்கை

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும்...

தமிழ்மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ்மக்கள் பேரவை கோரிக்கை

தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை...

யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில்...

தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது – சுமந்திரன்!

தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எம் மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதனாலேயே ஆட்சியாளர்களால் அதனைக் கடந்து போக முடியவில்லை என்றும் கூறினார். வடமராட்சி – திக்கத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்திலேயே அவர்...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும்...

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்- சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப் படையினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க இராணுவ...

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – வி.மணிவண்ணன்

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். புளியங்கூடல் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய...

அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதானம் வழங்கலை திடீரென நிறுத்தினர் சுகாதாரத் துறையினர்

வரலாற்றுச் சிறப்புமிக்க அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் அங்கு அடியவர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்டது. கோவிட் -19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் அன்னதானம் வழங்கல் நிறுத்தப்படவேண்டும் என்று ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அனலைதீவுக்கு...

யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி!

வாக்களிப்பு, நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்த சுகாதார நடைமுறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. கட்டாயமாக முகக் கவசம் அணிதல் 2. கை கழுவும் ஏற்பாடு 3. ஒரு மீற்றர் இடைவெளி 4. ஆளடையாள ஆவணங்களை...

இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருகோணமலை மாவட்ட தமிழ் பொது...

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக இளைஞர்கள் கூரிய அயுதங்களுடன் கைது!

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று (புதன்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பிபாக தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் நேற்றிரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக பொலிஸாருக்கு...

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் விளக்கம்.

பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த தரம் 1 உள்ளிட்ட அனைத்து தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts