இளையோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேலை வங்கி உருவாக்குவேன் – வி.மணிவண்ணன்

இளையோருக்கான வேலைவாய்ப்புப் பிரச்சனைகளை இல்லாது ஒழிக்கும் முகமாக நாம் தேர்தலில் வெற்றி பெற்றதும், உடனடியாக வேலை வங்கி (job bank) ஒன்றினை உருவாக்குவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி பகுதியில் உள்ள தொழிற்பேட்டைக்கு நேரில் சென்று அங்குள்ள நிலமைகள் தொடர்பில்...

யாழில் கணவரின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி படுகாயம்!

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தார்....
Ad Widget

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவிடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் குறித்து சம்பந்தன் கேள்வி!

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது....

கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு

கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. உற்பத்தி, வருமானம் மற்றும் கிருமிநாசினிகளுக்கான செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. கணக்கெடுப்பை ஒகஸ்ட் மாதம் 15ஆம்...

தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்தபோதும் ஆட்சியை அமைப்பதிலும், நாடாளுமன்றத்தை கலப்பது போன்ற...

முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழம் வடக்கு ஆளுநர் தெரவிப்பு

பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் 28-7-2020 வைபவரீதியாகத்...

அரச வேட்பாளரிற்கு வாக்களிக்க உத்தியோகத்தர்களை நிர்ப்பந்தித்த பிரதேச செயலாளர்!!

நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் அரச கட்சி வேட்பாளரிற்கு வாக்களிக்கும்படி உத்தியோகத்தர்களை வற்புறுத்திய பிரதேச செயலாளர் குறித்து முறையிட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகிறது. யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் ஒருவரே இந்த தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் அரச கட்சி என்றுமில்லாத வகையில் தேர்தல்...

கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாறாக 100 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை – எவருக்கும் கோரோனா தொற்று இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி...

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...

பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!!

நாட்டில் கடந்த நாட்களாக தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகராட்சியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 50 சதவீத டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த களமாக அடையாளம்...

யாழ். இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை அண்மைக்காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்கவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார பிரிவு கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் ஒருவருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆவது நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்....

நல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா...

தமிழ் தேசிய அரசியலை சரியான தடத்திலே நகர்த்திச் செல்வதற்கு எமக்கு ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும் – சுகாஷ்

“தமிழ் தேசிய அரசியலை சரியான தடத்திலே நகர்த்திச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும். எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்” என்று அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர், சட்டத்தரணி...

சில மணி நேரங்களில் திருடனைப் பிடித்த வட்டுக்கோட்டை பொலிஸ்!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில் நேற்று அதிகாலை 6 தங்கப் பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. எனினும் 12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துரித விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டர்....

ஜனநாயக போர்வையில் வரும் பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை – பிரதமர்

போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு...

வடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக? சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்

எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக் மற்றும் அரசியல் விடயங்களுக்குப் பொறுப்பான சிடோர்னியா கேபிறியல் ஆகியோர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசியபோதே...

நல்லூர் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை உறுதிப்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் அறிவுரை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவில் நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரியமுறையில் பின்பற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார். வடமாகாண மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநரின் செயலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாகாணத்தில் இடம்பெற்றுவரும் போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி...

தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் யாழில் மீள ஆரம்பம்!!!

வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முகமாக வட.மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ரிம்பர் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் உபதலைவர் பா.லக்சன் தெரிவித்துள்ளதாவது, “இனிவரும் காலங்களில் அரச துறைகளில் பணியாற்றும்...

அரச வேலைவாய்ப்பை பெற்றுத்தருவோம் என தமிழ் இளையோர்களிடம் தவறான பரப்புரை – மாவை குற்றச்சாட்டு

வடக்கு – கிழக்கில் வேலைவாய்ப்பு வழங்குவதாக தமிழ் இளையோர்களுக்கு தவறான தகவல்களை வழங்குகின்றனர் அரசின் ஆதாரவுக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள். சிலர் இளையோரிடம் விண்ணப்பப்படிவங்களை வழங்கி விவரங்களைச் சேகரிக்கின்றனர்” என்று தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ. சேனாதிராசா தெரிவித்தார். இவ்வாறு தவறான தகவல்களை வழங்கி இளையோரின்...
Loading posts...

All posts loaded

No more posts