- Saturday
- May 2nd, 2026
வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் சொந்த பேனாவை எடுத்துச் சென்று இவ்வாறு பயன்படுத்துவது...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் முதல் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2020-11-18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை வணக்கம், இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள...
2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் நீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றையதினம் (2020.11.18) குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கௌரவ பிரதமர் முதலில் நினைவு...
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.11.18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முனையம் இரண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் விமான நிலைய விமான போக்குவரத்து (ஸ்ரீ லங்கா) தனியார் நிறுவனம் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள...
தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய தீர்வை முன்வையுங்கள் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் என நேற்றைய தினம் பாராளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களிடம் தாங்கள் ஓர் வேற்று நாட்டில் வாழும் உணர்வும் எண்ணமும் இருக்கிறது காரணம் ஒரு...
மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்கு, தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணத்தில நேற்றையதினம்(புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் இரு ஆண்கள் வீட்டிலும் மற்றொரு பெண் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர். அதன்படி கந்தானையைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு...
கண்டி பழைய போகம்பறை சிறையில் இருந்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிக்க முயன்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைதி ஒருவர் தப்பித்துள்ளதுடன் மேலும் 3 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தபித்த கைதியை கைது செய்வதற்கான தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை...
எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை மாற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவாளர்கள் என கூறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரை நீக்கும் காங்கிரஸின் முடிவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ்...
பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் என்ற குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தனது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், மாணவன் இன்று வகுப்புகளுக்கு சமூகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக...
ஒரே பார்வையில் 2021 வரவு செலவுத்திட்டம் # பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் # வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல் # ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நீடிப்பு...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ,இதன்படி, கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் மற்றும் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த...
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உடன் மீனை உட்கொண்டு காண்பித்தார். அத்தோடு...
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...
கடந்த இரண்டு நாட்களாக யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையினாலே இப் பாதிப்பு...
மாத்தளை மாவட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவில் 06 தேசிய பாடசாலைகள்..... 2021 முதலாவது காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு..... ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.... மாத்தளை மாவட்டத்திற்கு உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.... உலகளாவிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும்...
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி மீளத் திறப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூன்றாம் தவணைக்காக திறப்பது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
