Ad Widget

ஒரே பார்வையில் 2021 வரவு செலவுத்திட்டம்!!

ஒரே பார்வையில் 2021 வரவு செலவுத்திட்டம்

# பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம்

# வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல்

# ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நீடிப்பு

# மஞ்சள்இ இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை
# தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு

# மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி

# சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு

# சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

# உள்நாட்டு நிறுவனங்கள் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பங்குச் சந்தையில் பட்டியலிட்டால் 50 சதவீத வருமான வரி விலக்கு

# வாகனம் பழுதுபார்த்தலுக்குத் தேவையான மேலதி உதிரிபாங்களை இற்ககுமதி செய்யும்போது வரி நிவரணம் வழங்கப்படும்.

உள்நாட்டு உற்பத்திக்கான விவசாய பதாரத்தங்கள் தவிர்ந்த ஏனைய விசாய பொருட்களை இறக்குமதியின்போது விசேட இறக்குமதி வரி

# கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம்

# முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையணி சேர்ந்த ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களுக்காகவும் நிவாரண வேலைத்திட்டங்கள் 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

# 2021 – 2022 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொலைத்தொடர்பு அபிவிருத்தி நிதியத்தியிலருந்து 15 மில்லியன் ரூபா முதலீடு

# கொவிட்-19 வைரஸ் தாக்கம் உட்பட தொற்று நோய்களினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் தற்போது கொரோனாவின் இரண்டாவது மூன்றாவது அலை – பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள்

# கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோரின் போஷாக்கை மேம்படுத்தும் திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

# மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி

# நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம்

# பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை

# வாகனங்களை புதுப்பிப்பதற்காகவும் அவற்றை பொருத்துவதற்காகவும் தேவையான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்காக வரிச்சலுகை

# வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை

# அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒன்றை பயன்பாட்டு பொலித்தீன்இ பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

# வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கென வலுவான கட்டமைப்பை கொண்ட புதிய சட்டங்கள்

# குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது.

$ உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான இறக்குமதி மாற்றீடுகளின் ஊடாக வெ ளிநாட்டுச் செலாவணியினை சேமிக்கின்றதுமான சீரானதும் நீண்டகால வருமானத்தையும் ஈட்டுகின்ற வர்த்தகக் கொள்கையொன்றினை வகுத்தல்

# வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள்

Related Posts