Ad Widget

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடையின்றி நடத்த அரசாங்கத்துடன் பேசவும் தயார்- மாவை

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடையின்றி நடத்துவதற்கு, தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணத்தில நேற்றையதினம்(புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாக தமிழ் தேசியத்தின்பால் உள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசுவதென தீர்மானித்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாவீரர் தின நினைவுகூரல், இறந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செழுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மாவீரர் நாள் குறித்து அந்தந்த துயிலுமில்லப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதென தீனமானித்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதனை அடுத்தவாரம் அறிக்கை மூலம் வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts