- Tuesday
- May 6th, 2025
இலங்கை இராணுத்தில் தமிழ், இளைஞர் யுவதிகளை இணையுமாறு அழைப்பு விடுவது படைத் தளபதிகளின் வேலையில்லை. அவர்களின் பதவி நிலைகளுக்கு அப்பாற்பட்ட வேலையை அவர்கள் செய்து வருகின்றார்கள். இவ்வாறான அழைப்புக்கு தமிழ் சமுதாயம் எடுபட்டுவிடக்கூடாது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்பாணத்தில் உள்ள தமிழ், இளைஞர் யுவதிகளை படையில் இணைந்துகொள்ளுமாறு...
நெல்லியடி பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் இராணுவத்தின் 19ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த லக்மால் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
செக் குடியரசின் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். டேவிட் லொட்றஸ்கா தலைமையிலான இக்குழுவினர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து யாழ் மாவட்டத்தின் நிலமைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர். அத்துடன் ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள மரியண்ணை பேராலயத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இங்கு...
சாரதி, நடத்துநர்கள் சேவையின்போது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் பழுதடைந்தால் மட்டும் கதைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவறின் சேவையில் இருந்து 10 நாள்கள் இடை நிறுத்தப்படுவர் என்று தனியார் பஸ் சங்கத்தின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி மற்றும் நடத்துநர்கள் பஸ் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது முகச்சவரம் செய்திருத்தல் வேண்டும். இவற்றை மீறும் சாரதி,...
தாவளை இயற்றாலைப் பகுதியில் பற்றைக் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் கொடிகாமம் பொலிஸாரால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எலும்புக் கூட்டுடன் காணப்பட்ட உடுப்புகள் மற்றும் செருப்பு ஆகியவற்றைக்கொண்டு அது இராசன் சந்திரமோகன் (வயது 13) என்னும் மாணவனுடையது என அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அதனை வழங்குமாறு அவர்கள்...
கடந்த பல வருடமாக இராணுவத்தினர் முகாமிட்டிருந்த காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரும், மேலும் சில பகுதிகள் இன்னமும் கையளிக்கபடாத நிலையிலேயே இருந்தன. தமது சொந்த காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதனால் எந்த விதமான வீட்டுத் திட்டங்களும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் தமது காணிகளை மீட்டுத் தருமாறு அக்காணிக்கு சொந்தமான 56 குடும்பங்கள் கடந்த மாதம் இலங்கை...
ஐ.ஓ.எம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடற்றொழில் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருமம் பாசையூர் இறக்குதுறை நிர்மாண அபவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாசையூர் கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 மில்லியன் ரூபா செலவில் இந்த இறங்கு துறை புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. (more…)
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். நகரப்பகுதயில் 725 கிராம் கஞ்சாவுடன் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்த வேளையில், யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டு, யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து...

இலங்கையின் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில்...
கிளிநொச்சியை அடுத்து யாழில் இருந்தும் பெரும் தொகையானவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று அளவெட்டியில் நடைபெற்றது. அளவெட்டி மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயணாளிகளுக்கான வீடுகளைக் கையளித்து உரையாற்றும் போதே அவர்...
513ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் அளவெட்டி மத்திப் பிரதேசத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். (more…)
அரச உத்தியோகத்தர்கள் தீவுப் பகுதியில் கடமையாற்ற தயக்கம் காட்டுவதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் விசனம் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனம் வழங்கும் போது நியமனம் பெறும் சில உத்தியோகத்தர்கள் பின் தங்கிய பிரதேசங்களுக்கு சென்று கடமையாற்ற பின்னடிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். (more…)
யாழ். சிறைச்சாலை பெண்கள் சிறைக்கூடத்திற்கான புதிய கட்டிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. யாழ். சிறைச்சாலை நலன்புரி சங்க தலைவியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாந்தா அபிமன்ன சிங்க சிறைக்கூடத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தார். (more…)
யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக எஸ்.பிரணவநாதன் நேற்றுத் திங்கட்கிழமை முதல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் யாழ். மாநகர சபை ஆணையாளராகப் பதவி வகித்த இவருக்கு அண்மையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டது. அரச தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர சபையில் அரசியல் பின்னணியிலேயே அவருக்கு இந்தத் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8...
வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் அதிபர்கள் நியமனம் செய்யப்படுவது பொருத்தமற்ற நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பில் தேவைஏற்படும்போது நீதிமன்றை நாடவுள்ளோம். இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)
யாழ். கடற்கரையோரங்களில் உள்ள பகுதிகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், யாழ். கொட்டடிப் பகுதியிலும் தமது கைவரிசையைத் தொடங்கியுள்ளனர். 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் குப்பைமேடு என்று அழைக்கப்பட்ட யாழ். கொட்டடி கடற்கரையோரம் தற்போது சுமார் 30 வரையான குடும்பங்கள் வசித்துவரும் குட்டிக் கிராமமாக விளங்குகின்றது. (more…)
வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் நிர்மாணப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வடபகுதி புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)
இன்னும் சில மாதங்களில் பண்ணை ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடையலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறிகாட்டுவான் வேலணை ஊடான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலத்தின் ஒரு பகுதி கடல்நீர்பட்டு முற்றாக உக்கி சேதமடைந்துள்ளது. உக்கிய பகுதி தினமும் இடம்பெறும் போக்குவரத்தால் சிதைந்து வருகின்றது. இந்த வீதி, பாலம் சிதைவு குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கு யாழ்ப்பாணத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதி தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரணையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் நோபுஹிட்டோ ஹோபு தெல்லிப்பளை மீள்குடியேற்ற மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை; நேற்றய தினம் சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பகுதியில் சமூக செயற்பாட்டு மையத்தின் ஊடாகவும் தெல்லிப்பளை மீள்குடியேற்ற பகுதி மக்களுக்கு 5.153 மில்லியன் ரூபா நிதியில்...

All posts loaded
No more posts