- Tuesday
- May 6th, 2025
இந்துக்களின் பாரம்பரிய பண்டிகை தீபத்திருநாள் அன்று தீபமேற்றுவதற்கு தடை விதிக்க இராணுவத்திற்கு அதிகாரமில்லை' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். (more…)
27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ஆம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை...
யாழ்.நகரில் இடம்பெற்றுவரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தப்படவில்லை. வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறும்போது பொது மக்களின் போக்குவரத்துக் குறித்து மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். (more…)
கடன்களைப் பெற்றுத் தொழில் செய்யும் போது கடனுக்கு உரிய வட்டியும் செலுத்தி இலாபமும் கிடைக்குமாயின் கடன்பெற்று தொழில் செய்யலாம். கடனைப்பெற்று அதற்குரிய வட்டியையும் முதலையும் செலுத்த முடியாது என்று தெரிந்தும் கடனைப் பெற்று விட்டு தலைமறைவாகுவது ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும். எனவே வர்த்தகர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும். (more…)
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட 56 வீதிகள் 27 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார். (more…)
டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
இலங்கையில் யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆதீனம் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் நிர்வாகக் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஜெயரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் இந்தியாவின் பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகள் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் உள்ள மாரீசன் கூடல் கிராம அலுவலர் பிரிவில் கனடாவில் வசிக்கும் ஒருவர், இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவருக்கே இவ்வாறு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். (more…)
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார். (more…)
வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கும் பெரும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. (more…)
பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என வட மாகாண உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி தெரிவித்தார். (more…)
யாழ். பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தினை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கடுமையான அழுத்தங்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் புதிய முகாம்கள் தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருகின்றன. (more…)
யாழ்ப்பாணத்தில் 'இணைந்து போதலின் சித்திரிப்புக்கள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச திரைப்படவிழா இந்த முறை இடம்பெறவுள்ளது.சர்வதேச இனத்துவக் கற்கைகளுக்கான மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 14 சர்வதேச மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. (more…)
யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.புறநெகும 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு செப்பனிடும் பணி இடம்பெறுகின்றன. (more…)
கனடா மொன்றியலில் யாழ். அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர். (more…)
யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்து அடுத்த மாதம் ஜனாதிபதியுடன் சந்தித்த கலந்துரையாடவுள்ளதாக யாழ். தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். நிரந்தர நியமனம் குறித்து கல்வி அமைச்சுடன் பல்வேறு போராட்டங்களை நடாத்தி தோல்வி கண்ட நிலையில், ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடவுள்தாக சங்கத்தினர் கூறினர். (more…)
கொழும்புத்துறை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பிறவுண்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தாங்கி அடிக்கல் நடும் நிகழ்வு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைத்தார். இந்த...
யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவர்...
ஏ - 9 வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் நிறைவு பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் மரியதாசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வீதி அகலிப்பின் போது பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் அபிவிருத்தியானால் ஏற்படுகின்ற சாத, பாதகங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடலின்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் தெரிவித்துள்ளனர். (more…)

All posts loaded
No more posts