- Friday
- April 10th, 2026
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 6 மாதக் பெண் குழந்தையென்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. (more…)
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 26 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேந்திரரசா உத்தரவிட்டுள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டில் பெண்கள், சிறுவர்களுடன் இயங்கும் இல்லங்கள், நிறுவனங்கள் எவற்றிலும் ஆண்களைப் பணிக்கு அமர்த்த முடியாது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.கைதடியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் துஷ்பிரயோகம் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...
2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
வேலணை 06ம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.அதேயிடத்தைச் சேர்ந்த செல்வராசா அசந்தன் (வயது-29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். (more…)
மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகன பதிவு கட்டணத்தை அதிகரிக்க மாகாண ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். (more…)
தரம் 6 முதல் 10 வரையிலான பாடத்திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)
தொழிற் பயிற்சி அதிகார சபையில் தொழிற்பயிற்சி முடித்த 63 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)
உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)
காரைநகரில் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. (more…)
யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார். (more…)
இளவாலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர், குடும்பப் பிரச்சினை காரணமாக ஒழிந்திருந்து விட்டு வீடு திரும்பியுள்ளதாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார். (more…)
வடமாகாணத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சிறுவர் பராமிரிப்பு நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் தங்கவேல் உமா தெரிவித்துள்ளார். (more…)
வயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். (more…)
வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் விபரங்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலக விசேட செயலணியால் திரட்டப்பட்டு வருகின்றது. (more…)
இந்திய கடற்பரப்பிற்குள் திசைமாறிச் சென்ற வல்வெட்டித்துறை பகுதி இரு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க சமாச தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்தார். (more…)
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். (more…)
குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.நல்லூர் அடையாளி வீதியைச் சேர்ந்த கணேஸ் மகேந்திரன் (வயது 52) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். (more…)
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து, தமிழ் சிங்கள புத்தாண்டு கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளை புதன்கிழமை காலை 7 மணி முதல் யாழ். நல்லூர் முத்திரைச் சந்தி சங்கிலியன் பூங்காவில் நடத்தியது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
