Ad Widget

வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவரையும் இந்திய கடற்படையினர் விடுதலை செய்தனர்

arrest_1இந்திய கடற்பரப்பிற்குள் திசைமாறிச் சென்ற வல்வெட்டித்துறை பகுதி இரு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க சமாச தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்தார். இந்திய கோடிஸ்வர பொலிஸார் இவர்களை விடுதலை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வல்வெட்டித்துறை கடற் பகுதியில் இருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்கு படகில் சென்ற இரு மீனவர்கள் திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் இந்திய கடற்படையினர் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தனர்.

இந்த மீனவர்களை விடுதலை தொடர்பாக வல்வெட்டித்துறை கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினர் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின் பிரகாரம் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க சமாச தலைவர் மேலும் கூறினார்.

Related Posts