Ad Widget

காரைநகரில் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

meetingகாரைநகரில் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஊர்காவற்துறை வைத்தியதிகாரி பணிமனை உயர் அதிகாரிகள், காரைநகர் பிரதேச செயலாளர், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை வைத்தியாகள், பணிப்பாளாகள் காரைநகர் அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

காரைநகர் பிரதேசத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், தேவைகளை கண்டறிதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related Posts