- Saturday
- July 26th, 2025

வடமராட்சியில் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் அதனை எமது கட்சி எதிர்க்கும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

பாடசாலை விட்டு கணவரின் வரவுக்காக வீதியில் காத்திருந்த ஆசிரியையின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மானிப்பாய் தாவடியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

ஊஞ்சலில் கட்டியிருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று தெல்லிப்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் தனுசன் (வயது 8) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாளை 19ஆம் திகதி 1 மணித்தியாலய பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார். (more…)

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விரைவு அனுமதி வழங்கும் சேவைப்பிரிவு நேற்று திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். (more…)

தெற்கில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஒரு நாள் கடற்றொழில் ஈடுபடாமல் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். குருநகர் கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். (more…)

யாழில். அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. (more…)

வல்லிபுர கோயிலுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

உப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். (more…)

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகள் 55 சதவீதம் வரை பூர்த்தியடைந்துள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80 அகவை நிறைவையொட்டிய அமுதவிழா நிகழ்வு, கட்சியின் தலைவர் எஸ்.முத்துலிங்கம் தலைமையில் காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. (more…)

வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

அயல் வீட்டுப் பெண் பொல்லினால் தாக்கியதால் மயக்கமடைந்த இளம் பெண்ணிடம் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும், தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. (more…)

எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

All posts loaded
No more posts